news

News April 3, 2025

35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

இடி, மின்னலுடன் மழை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி. லேசான மழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை.

News April 3, 2025

பீம்ஸ்டெக் என்றால் என்ன?

image

வங்காள விரிகுடா அருகிலுள்ள நாடுகள் இடையே பொருளாதார தொடர்பை ஏற்படுத்த 1997இல் உருவாக்கப்பட்டது பீம்ஸ்டெக். இதில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் அங்கம் வகிக்கின்றன. மோடி பிரதமரான பிறகு பீம்ஸ்டெக்கிற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. பீம்ஸ்டெக் நாடுகள் மக்கள் தொகை 167 கோடி. ஜிடிபி 2.88 டிரில்லியன் டாலர். 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.

News April 3, 2025

FD டெபாசிட் வட்டியை குறைத்த HDFC, YES BANK வங்கிகள்

image

FD டெபாசிட் மீதான வட்டியை HDFC, YES BANK குறைத்துள்ளன. ரூ.3 கோடிக்கும் குறைவான தொகை, 2 ஆண்டுகள், 11 மாதங்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் வட்டியில் 30 புள்ளிகளையும், 4 Yrs, 7 Months டெபாசிட் திட்டங்களுக்கு 40 புள்ளிகளையும் HDFC குறைத்துள்ளது. இதேபோல், YES BANK வங்கியும் வட்டியில் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. சேமிப்புக்கு வட்டி குறைத்தாலும், அதிக அளவில் கடன்கள் வழங்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

News April 3, 2025

டாப் 5 பிளாஸ்டிக் மாசு நிறைந்த நாடுகள்!

image

பிளாஸ்டிக் மாசு நிறைந்த 5 நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது தெரியவந்திருக்கிறது. அடுத்தபடியாக 3.5 மி.டன்னுடன் நைஜீரியா, 3.4 மி.டன்னுடன் இந்தோனேஷியா, 2.8 மி.டன்னுடன் சீனா, 2.6 மி.டன்னுடன் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

News April 3, 2025

பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா

image

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கராச்சியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவர் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சர்தாரிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 3, 2025

கோழி இறைச்சி சாப்பிட்ட 2 வயது சிறுமி சாவு… எச்சரிக்கை!

image

ஆந்திராவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி உயிரிழந்தார். பல்நாட்டைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் இருந்த வேக வைக்காத கோழி இறைச்சியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை பாதித்த நிலையில் பலியானார். 2021-ல் பறவை காய்ச்சலுக்கு ஹரியானாவில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து 2ஆவது உயிரிழப்பு தற்போது நேரிட்டுள்ளது. ஆகவே, இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள். SHARE IT!

News April 3, 2025

Ghilbli’ அலப்பறை.. உங்களால் சிரிப்பை அடக்க முடியாது!

image

கடந்த ஒரு வாரமாகவே, Ghibli ட்ரெண்டால், சோஷியல் மீடியாவே அல்லோல கல்லோலப் படுகிறது. ஆனால் வர வர, அதில் நடக்கும் சில தவறுகள் கலாய்க்கும் படியாக மாறி வருகிறது. அழகான போட்டோஸ் பலர் பதிவிட, அதனை கண்டமேனிக்கு மாற்றிவிட்டது இந்த Ghibli. ஒருத்தர் ரெண்டு பேருக்கு என்றால் பரவால.. பலருக்கும் இதே நடக்க, இது என்னடா Ghibliக்கு வந்த சோதனை என கலாய்க்க தொடங்கி விட்டனர். நீங்களே பாருங்க!

News April 3, 2025

நள்ளிரவில் பெண்ணுக்கு கொடூரம்… 2 பேர் கைது!

image

கேரளாவின் எர்ணாகுளத்தில் பணியாற்றி வருகிறார் அந்தப் பெண். சொந்த மாநிலமான பிஹாருக்கு சகோதரனுடன் ரயிலில் புறப்பட்டார். வழியில், பெங்களூரு ஸ்டேஷனில் இறங்கி உணவு வாங்க 2 பேரும் வெளியே வந்தனர். அப்போது, பின்தொடர்ந்த 2 அந்நியர்களில் ஒருவன், சகோதரனை பிடித்து வைத்துக் கொள்ள, மற்றொருவன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். 2 கொடூரர்களையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.

News April 3, 2025

மூத்த பத்திரிகையாளர் க.சிவஞானம் காலமானார்

image

மூத்த பத்திரிகையாளரும், மேடைப் பேச்சாளருமான க.சிவஞானம் உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழில் முன்னணி ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்தவர். சிவஞானம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

News April 3, 2025

₹3 கோடி சம்பளம்.. ஆனாலும் யாரும் வேலைக்கு வரல!!

image

வேலை இல்லை என்றாலும், இங்க வரவே மாட்டோம் என அனைவருமே ஒதுக்குகின்றனர். டாக்டர் வேலைக்கு ஆண்டுக்கு ₹3 கோடி சம்பளம், ஃப்ரீயா வீடு, கார் என சலுகைகளும் உண்டு. ஆனாலும் ஆள் கிடைக்கவில்லை. ஏனென்றால், வேலையிடமான ஆஸி.யின் ஜூலியா க்ரீக் என்பது மிகவும் தனிமையான இடம். 500 பேர் மட்டுமே வசிக்கும் இங்கிருந்து, அருகில் இருக்கும் நகருக்கு செல்லவே 7 மணி நேரமாகுமாம். இதனாலேயே தயங்குகின்றனர். நீங்க யாராவது ரெடியா?

error: Content is protected !!