News April 3, 2025
பீம்ஸ்டெக் என்றால் என்ன?

வங்காள விரிகுடா அருகிலுள்ள நாடுகள் இடையே பொருளாதார தொடர்பை ஏற்படுத்த 1997இல் உருவாக்கப்பட்டது பீம்ஸ்டெக். இதில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் அங்கம் வகிக்கின்றன. மோடி பிரதமரான பிறகு பீம்ஸ்டெக்கிற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. பீம்ஸ்டெக் நாடுகள் மக்கள் தொகை 167 கோடி. ஜிடிபி 2.88 டிரில்லியன் டாலர். 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.
Similar News
News January 18, 2026
கடலூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போமில்<
News January 18, 2026
பாஜக மூத்த தலைவர் ராஜ் கே.புரோஹித் காலமானார்

BJP மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநில EX அமைச்சருமான ராஜ் கே.புரோஹித்(70) உடல் நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்ட இவர், அமைச்சர், பாஜகவின் தலைமை கொறடா உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் இவரது மகன் ஆகாஷ் வெற்றி பெற்றிருந்தார். பதவியேற்பை பார்ப்பதற்குள் மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 18, 2026
டிரம்ப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு!

காசாவை நிர்வகிக்க டிரம்ப் அமைத்துள்ள <<18870153>>அமைதி வாரியத்திற்கு<<>> இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த குழுவை அறிவிக்கும் முன் USA தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், தங்கள் கொள்கைகளுக்கு இது எதிரானது எனவும் என இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குழுவில் துருக்கி அமைச்சர் இடம்பெற்றிருப்பதே எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையில், இஸ்ரேல்-USA உறவில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


