India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க பாடகி உட்பட 6 பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன் ஏப். 14-ல் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை 10 முறை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 11-வது முறையாக செல்லும் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பேருடன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பிளவுவாத அரசியல், இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் பாஜக அரசை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தவெக போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.
கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பட தயாரிப்புக்காக ராம்குமார் பெற்ற கடனை, தன்னால் அடைக்க முடியாது என பிரபு தெரிவித்துள்ளார். ராம்குமார் பெற்ற ரூ.3 கோடிக்காக, தனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அண்ணனின் கடனை தாங்கள் அடைக்கலாமே என நீதிபதிகள் கேட்ட போது, தன்னால் கடனை செலுத்த முடியாது என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த தாய் ஒருவர், தனது 3 குழந்தைகளை துண்டால் கழுத்தை நெரித்து, துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். காரணம், காதல். ரஜிதாவிற்கு(30) சென்னையா(50) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தை விரும்பாத அவர், ஸ்கூல் ரீ-யூனியனில் சந்தித்த சிவாவை(30) திருமணம் கொள்ள, இந்த கொடூரத்தை செய்துள்ளார். உங்க காதலுக்கு 3 குழந்தைகள் ஏன் சாக வேண்டும் என இதுபற்றி நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப். 4) விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காசி விசுவநாத சுவாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப். 7, 11-ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏப். 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கில் ஹிட் 4-ஆம் பாகத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடிப்பில் சைலேஷ் கொலானுவின் போலீஸ் த்ரில்லர் படமான ‘ஹிட் 3’, மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடுத்த பாகத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு முன்னோட்டமாக இந்த கேமியோ இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை அண்ணாமலை அண்மையில் சந்தித்தபோது என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி என்று அண்ணாமலையிடம் தலைவர்கள் கூறியதாகவும், இக்கூட்டணியை ஏற்றால் மாநில தலைவராக அவர் நீடிக்கலாம், கூட்டணிக்காக அண்ணாமலையை இழக்க விரும்பவில்லை, இனி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என தலைவர்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
பாஜக மேலிடத் தலைவர்களிடம் சில புள்ளி விவரங்களை அளித்து, அதிமுகவுடனான கூட்டணி பாஜகவுக்கு நல்லதில்லை, அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதைக்கேட்ட மேலிடத் தலைவர்கள், நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படியும், அதிமுக கூட்டணியை ஏற்கவில்லையேல் கட்சிக்கு முக்கியம் அளித்து பதவி விலகும்படி சொன்னதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.