News April 3, 2025
அண்ணனின் கடனை செலுத்த முடியாது: நடிகர் பிரபு

பட தயாரிப்புக்காக ராம்குமார் பெற்ற கடனை, தன்னால் அடைக்க முடியாது என பிரபு தெரிவித்துள்ளார். ராம்குமார் பெற்ற ரூ.3 கோடிக்காக, தனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அண்ணனின் கடனை தாங்கள் அடைக்கலாமே என நீதிபதிகள் கேட்ட போது, தன்னால் கடனை செலுத்த முடியாது என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
ஜன நாயகன்.. காலையிலேயே வந்த மகிழ்ச்சி செய்தி

‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகவுள்ளது. ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால், பிப்ரவரி 2-வது வாரத்திலோ (அ) மார்ச் முதல் வாரத்திலோ படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இது விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழகம் அதிர மாநிலம் முழுவதும் 1,000 தியேட்டர்களில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
News January 25, 2026
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 இன்று கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. முதல் டி20-ல் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், புதிய உத்திகளுடன் NZ களமிறங்கவுள்ளது.
News January 25, 2026
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைத்தால், பணப் பற்றாக்குறை வராது என நம்பப்படுகிறது. வீட்டின் வடக்கு திசையில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் உலோக ஆமையை வைத்திருப்பது செழிப்பை தரும். வெள்ளி யானையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டில் உடைந்த அல்லது சேதமடைந்த சிலைகளை வைத்திருக்க கூடாது எனவும் கூறப்படுகிறது.


