India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வளர்ச்சி மீதே இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது, நாடு பிடிப்பதில் நம்பிக்கை வைக்கவில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். தாய்லாந்து பிரதமர் சினவத்ராவுடன் பேச்சு நடத்தியபின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய மோடி, கலாச்சாரம், ஆன்மீக ரீதியில் இந்தியா, தாய்லாந்து நாடுகள் இடையே பல நூறாண்டு நல்லுறவு நிலவுவதாகவும், பெளத்த மதம் 2 நாட்டு மக்களையும் ஒன்றாக இணைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஹைதராபாத் அணிக்கு 201 ரன்களை கொல்கத்தா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவில், ரகுவன்ஷி(50), வெங்கடேஷ் ஐயர்(60) அரைசதம் விளாசி அசத்தினர். கேப்டன் ரஹானே(38), ரிங்கு சிங்(32*) உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. SRH சேஸ் பண்ணுமா? KKR வெற்றி பெறுமா?
சிவனுக்கு முதலில் கோயில் கட்டியது தமிழ்நாட்டில்தான். ராமநாதபுரத்தில் இருக்கும் உத்திரகோசமங்கை கோயில்தான் அது. ராவணனுக்கு திருமணம் நடந்தது அங்குதான் என புராணத்தில் சொல்லப்படுகிறது. மரகதக் கல்லிலான ஐந்தரை அடி நடராஜர் சிலை இங்கிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த சிவன் கோயிலில் மட்டுமே தினமும் தாழம்பூவால் பூஜை செய்யப்படுகிறது. மீனவப் பெண்ணாக தோன்றிய அம்பிகையை சிவன் கரம்பிடித்த தலம் இது. SHARE IT.
பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் Lee Montague (97) காலமானார். டிவி தொடரில் ஆரம்பத்தில் நடித்த அவர், பிறகு பல்வேறு திரைபடங்களிலும் நடித்துள்ளார். அதில் Brass Target, Brother Sun, Sister Moon and How I Won The War உள்ளிட்டவைகளும் அடங்கும். 1965ஆம் ஆண்டில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Jackanory-இல் 5 தொடர்கள் கதைசொல்லியாக செயல்பட்டதற்கு பாப்டா விருது பெற்றுள்ளார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னைக்கு வரவுள்ளார். புதிய தலைவருக்கான போட்டியில் தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில், அண்ணாமலைக்கு அடுத்து யார் என்பதை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக ஏப்.7, 8 ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் கிஷன் ரெட்டி சென்னையில் முகாமிடவுள்ளார்.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பளித்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீதான பாலியல் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ரேப் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், சனோஜ் மிஸ்ரா தன்னை ரேப் செய்யவில்லை எனக் கூறி இருந்தார். இந்நிலையில், வழக்கை அந்த பெண் வாபஸ் பெற்றுள்ளார். சிலரது சதியால் இப்படி நடந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த லைப்ஸ்டைல் கோச் லூக் குட்டினோ அளிக்கும் சூப் ரெசிபி: தேவையான பொருட்கள் : சர்க்கரைவள்ளி கிழங்கு-1, பூண்டு -1, ஸ்பிரிங் ஆனியன்-கொஞ்சம், பார்ஸ்லி, ரோஸ்மெரி -சிறிதளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சூப் தயாரிக்கவும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி சளி, ஃப்ளூ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ட்ரை பண்ணலாமே!
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதற்கு ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தியுள்ளது. திமுக வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்க வேண்டாம் என ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்துள்ள TN பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், ஆ.ராசா அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக பேசியிருப்பதாக சாடியுள்ளார். இதற்காக ஆ.ராசா வருத்தம் தெரிவிக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
உ.பி. சம்பலில் சிக்கிய போலி மாந்திரீகர்களிடம் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகளே அவர்களது குறி. உங்கள் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு மாந்திரீக பூஜை செய்தால் பணம் கொட்டும் என பெற்றோரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் அத்துமீறியுள்ளது. தனியறையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பை வணங்கி பூஜை நடக்குமாம். அதன்பிறகு அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
தன்வர்ஷா என அழைக்கப்படும் அந்த கும்பலிடம் இருந்து இதுவரை 200 சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார்களா என போலீஸ் விசாரித்து வருகிறது. பணத்தாசையால் தங்கள் வீட்டு பெண்களின் வாழ்க்கையை பெற்றோரே சீரழித்தது கொடுமையிலும் கொடுமை.
Sorry, no posts matched your criteria.