News April 3, 2025

சிறுமிகளின் பிறப்புறுப்புக்கு பூஜை… ஷாக்கிங் வீடியோ (2/2)

image

தன்வர்ஷா என அழைக்கப்படும் அந்த கும்பலிடம் இருந்து இதுவரை 200 சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார்களா என போலீஸ் விசாரித்து வருகிறது. பணத்தாசையால் தங்கள் வீட்டு பெண்களின் வாழ்க்கையை பெற்றோரே சீரழித்தது கொடுமையிலும் கொடுமை.

Similar News

News July 9, 2025

இந்த ஹீரோ யார் தெரிகிறதா?

image

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தற்போது ஹேமந்த் ராவ் இயக்கும் ‘666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவராஜ்குமாரின் லுக் எப்படி இருக்கும் என படக்குழு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. இதில் கையில் கன்னுடன், சீரியசாக தெரியும் அவரை பார்க்க அடையாளம் தெரியவில்லை. இதற்கிடையே சிவண்ணாவின் லுக்கை பார்த்தீங்களா என ரசிகர்கள் இந்த போட்டோவை டிரெண்ட் செய்கின்றனர். லுக் எப்படி?

News July 9, 2025

ஜெ. தம்பியாக நான் அரசியல் செய்தவன்: திருமாவளவன்

image

அதிமுக தோழமை கட்சி என்பதால்தான் கூட்டணி குறித்து விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக ஒரு பொருந்தா கூட்டணி என திருமா கூறியதற்கு, ‘எங்கள் கூட்டணி பற்றிக் கூற அவர் யார்?’ என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அதற்கு பதிலளித்த திருமா, பாஜகவால் ADMK பாதிக்கப்படக்கூடாது என்றார். மேலும், தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கே தெரியும் என்றார்.

News July 9, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!