news

News April 4, 2025

ஏப்ரல் 04: வரலாற்றில் இன்று

image

*1855 – தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்தநாள். *1905 – ஹிமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர். 1972 – காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் இறந்த தினம். *1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆலன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. *1976 – நடிகை சிம்ரன் பிறந்தநாள். *1979 – ‘ஜோக்கர்’ புகழ் கீத் லெட்ஜர் பிறந்தநாள்.

News April 4, 2025

டாப் ஹீரோக்களை பொளந்து விட்ட சசிகுமார்

image

தங்களுக்கு 25 வயதில் பையன் இருந்தும், அப்பா கேரக்டரில் நடிக்க சில ஹீரோக்கள் தயங்குவதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதை பல ஹீரோக்களிடம் சொல்லப்பட்ட பிறகே தன்னிடம் வந்ததாகவும், கதை பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபகாலத்தில் கேட்ட கதைகளிலேயே இந்த கதைதான் முழுத் திருப்தியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

சீனாக்காரன் என்ன பண்றான்? நாம என்ன பண்றோம்?

image

வேலையில்லாத இளைஞர்களை பணக்காரர்களின் டெலிவரி ஏஜெண்ட்களாக மாற்றுவதுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேலையா என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார். சீன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செமி கண்டக்டர், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாகவும், இந்திய நிறுவனங்களும் எதிர்கால தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News April 4, 2025

72,000 வீடியோக்கள்.. உலக மகா கொடூரர்களின் இழிசெயல்

image

டார்க் வெப்பில் குழந்தைகள் ஆபாச வீடியோ தளமான Kidflix-ஐ ஜெர்மன் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் இந்த வீடியோக்களை பார்த்ததும், குழந்தைகளை துன்புறுத்தி வீடியோக்களை அப்லோடு செய்ததும் தெரியவந்துள்ளது. மொத்தம் 72,000 வீடியோக்கள் இந்த தளத்தில் இருந்துள்ளது. 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 நாடுகளின் உதவியோடு ஜெர்மன் அதிகாரிகள் இந்த ஆப்ரேஷனை முடித்துள்ளனர்.

News April 4, 2025

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது. *மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை. *.சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள்.

News April 4, 2025

பாக்.ஐ ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவோம்: BJP அமைச்சர்

image

பாகிஸ்தானை ‘ஹிந்து ராஷ்டிரா’-வாக மாற்றுவோம் என மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவை ‘ஹிந்து பாகிஸ்தான்’ என மாற்ற விரும்புவதாக தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரானே இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னதாக, கேரளாவை குட்டி பாகிஸ்தான் எனவும், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என கூறியவர்தான் ரானே.

News April 4, 2025

அந்த மனசு தான் சார் கடவுள்!

image

பெங்களூருவைச் சேர்ந்த OkCredit நிறுவன CEO ஹர்ஷ் போகர்னா செய்த செயல், மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனம் பொருளாதார சிக்கலில் தள்ளாட, 70 பேரை அவர் பணிநீக்கம் செய்துள்ளார். ஆனால், அவர்களின் நோட்டீஸ் பீரியட் முடிவதற்குள் 67 பேருக்கு மற்ற நிறுவனங்களில் வேலை வாங்கி தந்துள்ளார். மீதமுள்ள 3 பேருக்கு 2 மாத சம்பளம் வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார்.

News April 4, 2025

மோடியின் அருகில் அமர்ந்த யூனுஸ்.. எதற்கான சிக்னல் இது?

image

தாய்லாந்து பிரதமர் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் அருகில் அமர்ந்தது பேசுபொருளாகியுள்ளது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாடு நடைபெறும் போது, இந்தியா- வங்கதேசம் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்பதற்கான சிக்னல் இது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது முதலே இந்தியாவுடனான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.

News April 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 226 ▶குறள்: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. ▶பொருள்: பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

News April 4, 2025

ரோஹித்தை அரணாக தாங்கி நிற்கும் பொல்லார்ட்

image

ஒரு சில போட்டிகளில் குறைவான ரன்கள் எடுத்ததற்காக ரோஹித் இப்படிதான் விளையாடுவார் என முடிவு செய்து விட முடியாது என MI பேட்டிங் கோச் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் எனவும், மும்பை அணி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். IPL-ல் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 21 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

error: Content is protected !!