news

News April 4, 2025

பாக்.ஐ ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவோம்: BJP அமைச்சர்

image

பாகிஸ்தானை ‘ஹிந்து ராஷ்டிரா’-வாக மாற்றுவோம் என மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவை ‘ஹிந்து பாகிஸ்தான்’ என மாற்ற விரும்புவதாக தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரானே இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னதாக, கேரளாவை குட்டி பாகிஸ்தான் எனவும், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என கூறியவர்தான் ரானே.

News April 4, 2025

அந்த மனசு தான் சார் கடவுள்!

image

பெங்களூருவைச் சேர்ந்த OkCredit நிறுவன CEO ஹர்ஷ் போகர்னா செய்த செயல், மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனம் பொருளாதார சிக்கலில் தள்ளாட, 70 பேரை அவர் பணிநீக்கம் செய்துள்ளார். ஆனால், அவர்களின் நோட்டீஸ் பீரியட் முடிவதற்குள் 67 பேருக்கு மற்ற நிறுவனங்களில் வேலை வாங்கி தந்துள்ளார். மீதமுள்ள 3 பேருக்கு 2 மாத சம்பளம் வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார்.

News April 4, 2025

மோடியின் அருகில் அமர்ந்த யூனுஸ்.. எதற்கான சிக்னல் இது?

image

தாய்லாந்து பிரதமர் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் அருகில் அமர்ந்தது பேசுபொருளாகியுள்ளது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாடு நடைபெறும் போது, இந்தியா- வங்கதேசம் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்பதற்கான சிக்னல் இது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது முதலே இந்தியாவுடனான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.

News April 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 226 ▶குறள்: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. ▶பொருள்: பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

News April 4, 2025

ரோஹித்தை அரணாக தாங்கி நிற்கும் பொல்லார்ட்

image

ஒரு சில போட்டிகளில் குறைவான ரன்கள் எடுத்ததற்காக ரோஹித் இப்படிதான் விளையாடுவார் என முடிவு செய்து விட முடியாது என MI பேட்டிங் கோச் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் எனவும், மும்பை அணி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். IPL-ல் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 21 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

News April 4, 2025

அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

image

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.

News April 4, 2025

டிரம்பின் அச்சுறுத்தல்.. இந்தியா என்ன செய்யப்போகிறது?

image

இந்திய இறக்குமதிகளுக்கு USA-வில் 27% வரிவிதித்திருப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் அதேவேளையில், USA அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், பல துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகமும் ஆலோசனை நடத்தியுள்ளது.

News April 4, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 04 ▶பங்குனி – 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: விசாகம் ▶நட்சத்திரம்: மிருகசீரிடம் கா 11.30

News April 4, 2025

வக்ஃபு மசோதா: திடீரென பேக் அடித்த நவீன்

image

பிஜு ஜனதா தள எம்பிக்கள் தங்கள் மனசாட்சி படி வக்ஃபு திருத்த மசோதாவிற்கு வாக்களிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு எதிராக வாக்களிப்போம் என அக்கட்சி நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது திடீரென பேக் அடித்துள்ளது. சிறுபான்மை சமூகத்தினரின் உணர்வுகளை மதித்து இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு மாநிலங்களவையில் 7 எம்பிக்கள் உள்ளனர்.

News April 4, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 04) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!