India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இபிஎஸ் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால் ‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது தான். இதுகுறித்து உங்கள் கருத்து?
காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தாலுகா மற்றும் ஆயுதப் படையில் உள்ள 1,299 காலிப் பணியிடங்களுக்கு வரும் 7ஆம் தேதி முதல் <
மூத்த பத்திரிகையாளர் சிவஞானம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னணி தொலைக்காட்சிகளில் திறம்பட பணியாற்றிய ஆற்றல்மிக்க, ஆளுமை குணம் தாங்கிய சிவஞானம் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அவரை இழந்துவாடும் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் காந்த்வா அருகே 150 ஆண்டுகள் பழமையான கிணற்றை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிணற்றிலிருந்து சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், தலா ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஏலத்தில் இவருக்கு போய், ₹23.75 கோடியா என விமர்சித்து, 3 மேட்ச்களில் கிண்டலடித்து வந்தவர்களுக்கு நேற்று வெங்கடேஷ் ஐயர் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டார். 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசி, சட்டென ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். போட்டி SRH கையில் இருந்து நழுவி போக முக்கிய காரணம் வெங்கடேஷ் ஐயர் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஏப்.6ம் தேதி PM மோடியை, EPS, OPS சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக அவரை சந்தித்தாலும், பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக சக்திகளையும் ஒன்றிணைப்பது, அதனால் ஏற்படும் சாதகம் & பாதகம், கட்சி அதிகாரம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெ., மறைவிற்கு பின், பிரிந்து கிடந்த OPS- EPS-ஐ மோடி தான் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ்குமார்(87) வயதில் காலமானார். 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ள அவர் தனது தேசபக்தி படங்களுக்காக ‘பாரத் குமார்’ என்ற அடைமொழியையும் பெற்றார். பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த அவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
SRH அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று KKR அணியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம், IPL தொடரில் தனது மிகப்பெரிய தோல்வியை அந்த அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், SRH CSK அணியிடம் கடந்த ஆண்டு 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததே ரெக்கார்டாக இருந்தது. 300 ரன்கள் விளாசப்போகும் முதல் IPL அணி என ரசிகர்கள் கருதும் அணி, தொடர்ந்து தடுமாறி வருவதற்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
மத்தியில் புதிய அரசு அமையும் போது, வக்ஃபு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டைப் பிரிப்பதற்காக இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளதாகவும், புதிய அரசு அமையும் போது, மசோதாவை ரத்து செய்ய தேவையான திருத்தங்களை செய்வோம் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை, மாநிலங்களையில் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.