News April 4, 2025

INDIA கூட்டணி ஆட்சியில் வக்ஃபு மசோதா ரத்து: மம்தா

image

மத்தியில் புதிய அரசு அமையும் போது, வக்ஃபு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டைப் பிரிப்பதற்காக இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளதாகவும், புதிய அரசு அமையும் போது, மசோதாவை ரத்து செய்ய தேவையான திருத்தங்களை செய்வோம் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை, மாநிலங்களையில் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.

Similar News

News February 7, 2026

ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

image

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?

News February 7, 2026

தேர்தலில் TN vs NDA இடையே தான் போட்டி: ஸ்டாலின்

image

துரோகிகளும் எதிரிகளும் சேர்ந்து ஒட்டுமொத்த TN-ன் சுயமரியாதையை அடகுவைக்க பார்க்கிறார்கள் என விருதுநகரில் ஸ்டாலின் பேசியுள்ளார். வரும் தேர்தலில் TN-க்கும், NDA-க்கும் இடையே தான் போட்டி எனக் கூறிய அவர், இளைஞரணியின் ஆதரவு தொடர்ந்து இருந்தால் திமுகவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.

News February 7, 2026

வீட்டிலிருந்தே ஆதார் எண்ணை இணைக்கலாம்!

image

கேஸ் நுகர்வோர் அனைவரும் ஆதார் e-KYC-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே 75% பேர் இந்த செயல்முறையை முடித்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வீட்டிலிருந்தே இலவசமாக KYC-ஐ பூர்த்தி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>https://pmuy.gov.in/e-kyc.html<<>> இணையதளத்தை அணுகவும். மேலும் விவரங்களுக்கு 18002333555 அழைக்கவும்.

error: Content is protected !!