News April 8, 2024

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்

image

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளுங்கள். ஆனால், பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தார்.

News April 8, 2024

IPL: தீவிர பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

image

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு சரிந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில், சென்னை வெற்றி பெறுமா? மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News April 8, 2024

மாட்டிறைச்சி சாப்பிடுவதாக வதந்தி

image

மாட்டிறைச்சி சாப்பிடுவதாக வதந்தி பரப்பப்படுவதாக மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி சாப்பிடுவதில் தவறில்லை என 2019இல் அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதை மறுத்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மாட்டிறைச்சியோ, வேறு இறைச்சியோ தாம் சாப்பிடுவதில்லை, தாம் ஒரு பெருமைமிகு இந்து என்று தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பால் காலமானார்

image

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் கழக இணை செயலாளருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் (53) திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஏ.கே.எஸ்.அன்பழகன் மறைவுச் செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

News April 8, 2024

மக்களை கிறுகிறுக்க வைக்கும் ‘போதை’ அரசியல்

image

கோக்கைன் போன்றவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் மக்களை கிறுகிறுக்க வைக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதேபோல் இப்போது பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தேர்தல் பரபரப்பை கூட்டி வருகின்றன. எது எப்படியோ தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

News April 8, 2024

நிதிஷை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

image

4,000க்கும் அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்ததை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பிஹாரில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய நிதிஷ், பாஜக கூட்டணி 4,000க்கும் அதிக தொகுதிகளில் வெல்லும் என கூறியிருந்தார். இதை ஆர்ஜேடி கட்சியினரும், நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் கிண்டலடித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

News April 8, 2024

சூரிய கிரகணத்தை நேரலை செய்யும் நாசா

image

முழு சூரிய கிரகணத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணத்தை இரவு நேரம் என்பதால் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் நேரம் என்பதால் காண முடியும். இந்த கிரகணத்தை நாசா நேரலை செய்வதுடன், சர்வதேச விண்வெளி மையத்திற்குள் இருந்து கிரகணம் தெரியும் காட்சியை ஒளிபரப்பவுள்ளது.

News April 8, 2024

சர்வாதிகாரியாகி விட்டார் இபிஎஸ்

image

சர்வாதிகாரி போல இபிஎஸ் செயல்படுவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுகவை தாம் எதிர்க்கவில்லை, அதிமுகவை கைப்பற்றுவது தனது விருப்பமில்லை என்று தெரிவித்தார். அதிமுகவை காக்கவும், எம்ஜிஆரின் கொள்கைகள் அடிப்படையில் அதிமுக நடத்தப்படவே தாம் போராடுவதாகவும், இந்தத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக படுதோல்வியடையும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

News April 8, 2024

தங்கம் விலை ரூ.53,000-ஐ தாண்டியது

image

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.53,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.88,000க்கும் விற்பனையாகிறது.

News April 8, 2024

கூட்டணி கட்சிகளுக்கு திமுக அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் I.N.D.I.A கூட்டணி 8 தொகுதிகளில் இழுபறியைச் சந்திக்கும் என ரகசிய தகவலை ஆளும் தரப்புக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டாக அளித்துள்ளதாம். அதில், நான்கு தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் என்பதால் அக்கட்சிகளிடம் திமுகவின் தலைமை நேரடியாக பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து, உடனடியாக சிக்கல்களை எப்படியாவது சரிசெய்யவும் அவர்களிடம் திமுக அறிவுறுத்தியுள்ளதாம்.

error: Content is protected !!