News April 8, 2024
சூரிய கிரகணத்தை நேரலை செய்யும் நாசா

முழு சூரிய கிரகணத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணத்தை இரவு நேரம் என்பதால் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் நேரம் என்பதால் காண முடியும். இந்த கிரகணத்தை நாசா நேரலை செய்வதுடன், சர்வதேச விண்வெளி மையத்திற்குள் இருந்து கிரகணம் தெரியும் காட்சியை ஒளிபரப்பவுள்ளது.
Similar News
News December 10, 2025
எந்த ஷா வந்தாலும் முடியாது: மு.க.ஸ்டாலின் சவால்

தேனாம்பேட்டையில் நடந்த ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரை நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படங்களை X பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘எந்த ஷா வந்தாலென்ன, எத்தனை திட்டம் போட்டாலென்ன. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்’ என்று சூளுரைத்துள்ளார்.
News December 10, 2025
ODI கிரிக்கெட்டின் உச்சத்தை நெருங்கும் கோலி!

ODI பேட்டரிகளின் தரவரிசையில் கிங் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். SA-வுக்கு எதிரான தொடரில், 2 சதங்களும், ஒரு அரைசதமும் விளாசிய அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றிருந்தார். தரவரிசையில் அவர் 773 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்க, முதல் இடத்தில் ரோஹித் சர்மா(781 புள்ளிகள்) உள்ளார். ரோஹித்தும், கோலியும் ODI-யின் உச்சம் தொட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
News December 10, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க EPS வலியுறுத்தல்

2021-ல் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ₹2,500 வழங்கப்பட்டதாக இபிஎஸ் தெரிவித்தார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், இதுவரை திமுக ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தவில்லை என கடுமையாக விமர்சித்தார். மேலும், வரும் தைப் பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?


