India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤1277 – வேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.
➤1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
➤1906 – ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.
➤1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
➤ 2000 – அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கேப்டன் மாற்றம், 3 போட்டியில் தொடர் தோல்வி, ரோகித்-பாண்டியா ரசிகர்கள் மோதல் என சிக்கலில் தவித்த அந்த அணிக்கு, ஆக்ஸிஜனாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்த வெற்றி தொடர வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
◾விளக்கம்:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்தால் சினிமாவில் நிலைக்க முடியாது என நடிகை ஸ்மிருதி வெங்கட் தெரிவித்துள்ளார். எவ்வளவு சவாலான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், கமர்ஷியல் படங்களில் வந்து போகும் கதாநாயகியாக நடிக்க முடியாது, அதில் திறமையை வெளிப்படுத்த முடியாது என்ற அவர், பொறுமையாக காத்திருந்தாலும் நல்ல கேரக்டரில் நடிப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். ஆனால், ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என பிரதமர் மோடி கூறுவதாக விமர்சித்த அவர், நேர்மையாக ஆட்சி நடத்திய காரணத்திற்காக கெஜ்ரிவாலை பொய் குற்றச்சாட்டு அடிப்படையில் பாஜக கைது செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.
ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு கடினமான சூழ்நிலைகளைக் கடக்க பேருதவியாக இருக்கும். இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர! வெற்றியாளர்களும், வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும். நகைச்சுவை வாழ்வின் தேவையான சுவை.
இன்று (ஏப்ரல் 08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ ம.பி-யில் பிரதமர் பங்கேற்ற ஊர்வலத்தில் விபத்து
➤ நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை
➤ திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பு
➤ தீபாவளிக்கு வெளியாகிறது வேட்டையன்
➤ டெல்லிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி வெற்றி
➤ டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பெற்ற மும்பை அணி
ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மற்ற நிறுவனங்களிலும் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 1.7% சரிந்திருந்தது.
Sorry, no posts matched your criteria.