News April 8, 2024
உடலை காக்கும் அருமருந்து நகைச்சுவை

ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு கடினமான சூழ்நிலைகளைக் கடக்க பேருதவியாக இருக்கும். இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர! வெற்றியாளர்களும், வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும். நகைச்சுவை வாழ்வின் தேவையான சுவை.
Similar News
News December 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
News December 7, 2025
ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
News December 7, 2025
சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்நாயகன் (MOS) விருது வென்றவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். SA-வுக்கு எதிரான ODI தொடரில் 302 ரன்கள் குவித்த கோலிக்கு MOS வழங்கப்பட்டது. இது அவருக்கு 20-வது விருதாகும். சச்சின் 19 முறை MOS வென்றிருந்தார். அதேபோல, ODI-ல் அதிகமுறை MOS வென்றவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவுடன் 2-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.


