News April 8, 2024
பாஜக கனவு மட்டுமே காண முடியும்

கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். ஆனால், ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என பிரதமர் மோடி கூறுவதாக விமர்சித்த அவர், நேர்மையாக ஆட்சி நடத்திய காரணத்திற்காக கெஜ்ரிவாலை பொய் குற்றச்சாட்டு அடிப்படையில் பாஜக கைது செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.
Similar News
News December 15, 2025
கரூர் அருகே அதிரடி கைது..!

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுப்பட்டி மந்தையில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய தகவலின் பேரில் வெள்ளியணை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சத்யராஜ் (26), குமார் (35), நவீன் (26) ஆகிய மூவரையும் கைது செய்து, 52 சூதாட்ட சீட்டுகள் மற்றும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
தமிழக தேர்தல்.. களமிறங்கும் 3 மத்திய அமைச்சர்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பொறுப்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். அதேபோல், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, ஆட்சி அமைக்கும் திட்டத்தோடு 3 மத்திய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது.
News December 15, 2025
துரோகம் செய்யவில்லை: ஜி.கே.மணி

ஜி.கே.மணி துரோகம் செய்ததாக <<18512558>>அன்புமணி <<>>குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். துரோகி எனக் கூறியது வேதனையாக உள்ளதென குறிப்பிட்ட அவர், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க தானே பரிந்துரைந்ததாக கூறியுள்ளார். ராமதாஸ் வேதனையில் உள்ளதாகவும், இருவரும் அமர்ந்து பேசினாலே தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


