India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு தேர்தலில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார். தேசிய கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தமிழகத்துக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தால் ‘கூட்டணி தர்மம்’ என்ற பெயரில் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக இபிஎஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சூடான நீரில் தேன் கலந்து பருகலாம். தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடிந்தால் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது சிறப்பு. கொழுப்புச் சத்து நிறைந்த உணவைத் தவிர்த்து புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடலாம். இரவு உணவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முறையான தூக்கம் மிக அவசியம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பைக்கில் சென்ற கணவன், மனைவி மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். கர்ப்பமாக இருந்த மனைவி மதுமதியையும் (25) இரண்டு வயது மகளையும் அழைத்துக் கொண்டு கணவர் ராஜதுரை (29) மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் இவர்கள் சென்ற பைக்கின் மீது மோதியது. அதில் இருவரும் உயிரிழந்துவிட்ட நிலையில் மகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் பங்கேற்றிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், வரும் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பாஜகவில் 4,000 எம்.பி.க்கள் இருப்பார்கள் என தவறுதலாக கூறினார். தொடர்ந்து பேச்சை முடித்த அவர், பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார். இதை எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்திய பங்குச்சந்தையில் ஏப்ரல் முதல் வாரத்தில், பங்குகளில் முதலீடு செய்த ரூ.325 கோடி முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். பங்குகளின் மதிப்பு உச்சத்தில் இருப்பது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணிகளால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரம், ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.1,215 கோடியை அன்னிய முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்துள்ளனர்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்திருக்கிறது. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் கில் தலைமையிலான குஜராத் அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே தலா 2 போட்டிகளை வென்றுள்ளதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அத்தொகுதி காலியானது என சட்டப்பேரவை செயலகம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில், நடப்பு தேர்தலில் 7 கட்டங்கள் முடிவதற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், நடப்பு தொடரில் மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 234 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, கடைசி பந்து வரை போராடி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி தனது கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தது வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது.
தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோமென்று சொன்ன அண்ணாமலை, பாஜக நிர்வாகியிடம் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து உரிய பதில் சொல்ல வேண்டுமென நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நேற்றிரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் என்பதால், அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், கீழ்காணும் அறிகுறிகள் உடலில் தென்படும். அதை தெரிந்து கொள்வோம். 1) மிகுந்த உடல் சோர்வு 2) தூக்கமின்மை 3) பாதங்களில் வீக்கம் 4) கண்களை சுற்றி வீக்கம் 5) தசை வலி ஆகியவை இருக்கும். இந்த அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தாகி விடும்.
Sorry, no posts matched your criteria.