News April 7, 2024

தமிழகத்தில் இடைத் தேர்தல் வருகிறது

image

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அத்தொகுதி காலியானது என சட்டப்பேரவை செயலகம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில், நடப்பு தேர்தலில் 7 கட்டங்கள் முடிவதற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

Similar News

News December 6, 2025

செல்போன் ரீசார்ஜ் செலவு குறைந்தது.. HAPPY NEWS

image

வாடிக்கையாளர்களின் செல்போன் ரீசார்ஜ் செலவை குறைக்கும் வகையில், அசத்தலான ஆஃபரை BSNL கொண்டு வந்துள்ளது. அதாவது, ₹347-க்கு ரீசார்ஜ் செய்தால், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 100 SMS உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நெட்வொர்க்குகளில் இந்த சேவைகளை பெற ₹500 வரை செலவிட வேண்டி இருக்கும். SHARE IT.

News December 6, 2025

நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

image

தவெகவில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பதவியை விஜய் வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான அவர், நம்மோடு பயணிக்க இருப்பது பெருமகிழ்ச்சி என விஜய் தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் ஆனந்துடன் இணைந்து நாஞ்சில் சம்பத் பணியாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 6, 2025

காலத்தினாற் செய்த உதவி.. தமிழகத்துக்கு இலங்கை நன்றி

image

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, தமிழக அரசு தரப்பில், ₹1.19 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்நாட்டின் ஊவா மாகாண Ex CM செந்தில் தொண்டமான், இந்த மனிதாபிமான உதவிக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில், தமிழகம் செய்த பேருதவி தமது மக்களின் மீட்சிக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!