News April 4, 2024

ஒரே ஆண்டில் ரூ.17,545 கோடியிலிருந்து ‘பூஜ்யம்’

image

பைஜூ அதிபர் ரவீந்திரனின் சொத்து ஒரே ஆண்டில் ரூ.17,545 கோடியில் இருந்து பூஜ்யமாகியுள்ளது. 2011இல் தொடங்கப்பட்ட பைஜூ செயலி மூலம் தொடக்க கல்வி முதல் எம்பிஏ வரை பயிற்சி அளிக்கப்பட்டது. 2022இல் பைஜூ மதிப்பு 22 பில்லியன் டாலராகவும், ஓராண்டுக்கு முன்பு ரவீந்திரனின் சொத்து ரூ.17,545 கோடியாகவும் மதிப்பிடப்பட்டது. ஆனால் 2024 போர்ப்ஸ் பட்டியலில் அவரின் சொத்து பூஜ்யம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

கர்நாடகாவில் மோடி அலை இல்லை

image

கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் விமர்சித்துள்ளார். மத்திய அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடகாவிற்கு எந்த திட்டத்தையும் தராததால் இங்கு மோடி அலை இல்லை என்று கூறினார்.

News April 4, 2024

BREAKING: முதல்வர் ஸ்டாலின் கொந்தளிப்பு

image

புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21,000 கோடிக்கு மேல் ஏழைகளிடம் பறித்துள்ளார்கள் எனக் கூறிய அவர், சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை செல்லாததாக்கி வங்கிகளில் வரிசையில் நிற்கவைத்து வதைத்தார்கள். ஆனால் ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுகிறார் என விமர்சித்துள்ளார்.

News April 4, 2024

அமேசானின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

image

அமேசான் இணையதள சேவையில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் ஏராளமானோரை அமேசான் நிறுவனம் பணியில் அமர்த்தியது. ஆனால் கொரோனா பாதிப்பு விலகிய பிறகு 2022,23ஆம் ஆண்டுகளில் 27,000 பேரை பணிநீக்கம் செய்த அமேசான், தற்போது விற்பனை, மார்க்கெட்டிங், தொழில்நுட்ப பிரிவு ஊழியர்களில் நூற்றுக்கணக்கானோரை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

News April 4, 2024

ஓபிஎஸ் இதயத்தில் இருந்து எறிந்துவிட்டார்

image

இரட்டை இலை சின்னம் தான் ஓபிஎஸ்க்கு வாழ்வு, அடையாளம், முகவரியை கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை இதயத்தில் இருந்து எறிந்துவிட்டாலும் மனசாட்சி அச்சினத்திற்கே வாக்கு கேட்பதாக விமர்சித்தார். முன்னதாக, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஓபிஎஸ், பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 4, 2024

வைரலாகும் அஜித்-நடராஜன் புகைப்படங்கள்

image

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இரவு நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News April 4, 2024

காங்கிரஸில் இருந்து விலகினார்

image

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கவுரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திசையின்றி பயணிக்கும் காங்கிரஸில் செயல்பட தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றோ, தன்னால் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

News April 4, 2024

தொடர் வெற்றியை பணிவோடு ஏற்கிறோம்

image

வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக ஆடக்கூடாது, எப்போதுமே அமைதி காக்க வேண்டும் என கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயஸ் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 270 ரன்கள் அடிப்போம் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, இந்த தொடர் வெற்றி அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்போம் என்றும் கூறினார்.

News April 4, 2024

I.N.D.I.A கூட்டணியின் வெற்றி தான்

image

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியும், சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து முத்தரசன் கூறும்போது, வயநாடு தொகுதியில் யார் வென்றாலும் அது I.N.D.I.A கூட்டணியின் வெற்றிதான் என்றும், ராகுல் போட்டியிடுகிறார் என்பதற்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெற முடியாது எனவும் கூறினார்.

News April 4, 2024

பாகிஸ்தானின் முகேஷ் அம்பானி தெரியுமா?

image

பாகிஸ்தான் தொழிலதிபர் மியான் முகம்மது மான்சா, அந்நாட்டின் முகேஷ் அம்பானி என அழைக்கப்படுகிறார். 1941இல் கொல்கத்தாவில் பிறந்த அவர், 1947ஆம் ஆண்டு பிரிவினையின் போது குடும்பத்தினருடன் பாகிஸ்தானுக்கு சென்றார். பஞ்சு ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அவருக்கு, ரூ.1.38 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன. ஷாகீத்கானை தொடர்ந்து, பாகிஸ்தானின் 2வது பெரிய பணக்காரராக உள்ளார்.

error: Content is protected !!