News March 23, 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

image

நடப்பு ஐ.பி.எல் சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரவீந்திரா 37 ரன்கள் எடுத்தார்.

Similar News

News November 8, 2025

மூச்சு முட்டும் டெல்லி காற்று… அதிகரித்த மாசுபாடு

image

தலைநகர் டெல்லி காற்றுமாசால் மோசமாக திணறி வருகிறது. இன்று அங்கு பல்வேறு இடங்களில் காற்றுமாசு (AQI) ‘மிக மோசமான’ அளவான 400-ஐ தாண்டியுள்ளது. பனியுடன் காற்றின் நுண்ணிய தூசுகளும் சேர்ந்துகொள்ள, காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலை சமாளிக்கும் விதமாக அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைப்பது, வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

News November 8, 2025

CINEMA ROUNDUP: ஆஸ்கரில் திரையிடப்படும் மம்முட்டி படம்

image

* சித்தார்த் நடிக்கும் புதிய படத்துக்கு ரவுடி அண்ட் கோ என பெயரிடப்பட்டுள்ளது. *ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், பிப்ரவரி 12-ம் தேதி மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படம் திரையிடப்படுகிறது. *ராதிகா ஆப்தேவின் ‘சாலி மொஹப்பத்’ நேரடியாக OTT-ல் வெளியாகிறது. *சிம்புவின் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் நவ.24-ம் தேதி தொடங்குகிறது. *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 2.07 மணிக்கு வெளியாகிறது.

News November 8, 2025

‘நாகேந்திரன் இறக்கவில்லை’ ஆம்ஸ்ட்ராங் சகோதரர் புகார்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை என சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் இறக்கவில்லை என்றும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் கடந்த அக்.9-ம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!