News March 22, 2024

தோல்வி பயத்தின் உச்சத்தில் மோடி இருக்கிறார்

image

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் மோடிக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “மோடி வாரம் வாரம் தமிழகத்துக்கு வருகிறார். அவரிடம் தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டு வருகிறேன். ஆனால் அதற்கு மட்டும் அவரால் பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டுக்கு எதாவது நல்லது செய்தால் தானே அவரால் சொல்ல முடியும். இல்லை என்பதால் திமுகவை விமர்சித்துவிட்டு செல்கிறார்” என்றார்.

News March 22, 2024

கோலாகலமாகத் தொடங்கியது ஐபிஎல் தொடக்க விழா

image

ஐபிஎல் 17ஆவது சீசன் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சிவாஜி படத்தின் ‘பல்லேலக்கா’ பாடலை பாடி அசத்தினார். இந்த கலை நிகழ்ச்சிகளை முடிந்த பின் சிஎஸ்கே – ஆர்சிபி போட்டி தொடங்கும்.

News March 22, 2024

ஏப்.1இல் செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை

image

செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஏப்.1ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரியும், 3 மாதத்தில் அமர்வு நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முடிவில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

News March 22, 2024

சேப்பாக்கம் முழுவதும் தல ரசிகர்கள்

image

நீண்ட நாள்களுக்குப் பின் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கலாம் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ‘Thala Is Back’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய ரசிகர்கள் தோனியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். உங்கள் ஆதரவு எந்த அணிக்கு?

News March 22, 2024

₹49க்கு 25GB டேட்டா இலவசம்

image

வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பயனாளர்கள் ₹49க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 25GB டேட்டாவை பெறலாம் என அறிவித்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரையொட்டி இந்த சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஏர்டெல் நிறுவனம் ₹49க்கு ரீசார்ஜ் செய்தால், 20GB டேட்டா வழங்குவது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

எச்.ஐ.வி.யை அழிக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்?

image

எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி கிருமியை மனித உடல்களில் இருக்கும் செல்களில் இருந்து நீக்கும் வழியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு திருத்த தொழில் நுட்பத்திற்கு 2020ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே முறையை கடைபிடித்து, நமது செல்களில் இருந்து எச்.ஐ.வி பாதிப்பை நீக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

News March 22, 2024

கெஜ்ரிவால் கைது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார்

image

அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், “தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜகவின் சூழ்ச்சி அரசியலை தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளோம். இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.

News March 22, 2024

தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம்

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தருமபுரி தொகுதியில் வேட்பாளராக அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அன்புமணியின் மனைவி ‘சௌமியா’ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தொண்டர்களிடையே ஆதரவு இல்லாததால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

News March 22, 2024

ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

கோடை வெயில் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

News March 22, 2024

தீவிர சிகிச்சையில் அருந்ததி நாயர்

image

கேரளாவில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐசியூவில் உள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், சிகிச்சைக்கு அதிகம் செலவாகுவதால் நிதியுதவி தேவைப்படுவதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அருந்ததி நாயர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!