News April 6, 2024
ஹேர் கட் செய்ய கோலி இவ்வளவு செலவிடுகிறாரா?

விராட் கோலிக்கு கிரிக்கெட்டை தாண்டி, அவரது ஹேர் ஸ்டைலுக்கென தனி பாலோயர்கள் உண்டு. கோலியின் ஹேர் கட் புகைப்படங்களை பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடுவார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும். இந்நிலையில், விராட் கோலி ஹேர் கட் செய்ய குறைந்தது ரூ.1 லட்சம் செலவிடுவதாக, ஆலிம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுகிறதா?

உடல் சோர்வு, பலவீனம், ஆற்றல் இல்லாமை, ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள். இதற்கு, கொழுப்பு நிறைந்த மீன்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வது உதவும். மேலும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது.
News February 19, 2026
பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (1/2)

ராஜ்யசபாவில் திமுகவின் 4 MP சீட்களுக்கு தேர்தல் வருகிறது. ஏற்கெனவே திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் 3-ல் காங்., & விசிக ஒன்றை கேட்கிறதாம். அத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படும் தேமுதிகவும், ராமதாஸும் தலா 1 சீட் கேட்கிறார்களாம். இதனால் திமுக திக்குமுக்காடி போயிருப்பதாக பேசப்படுகிறது. அதிமுக செய்திக்கு <<19180714>>CLICK<<>>.
News February 19, 2026
பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (2/2)

அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அந்த இரண்டே சீட்டுக்கு அக்கட்சியில் கடும் போட்டி நடக்கிறதாம். ஏற்கெனவே 1 MP சீட் அன்புமணிக்கு உறுதியாகிவிட்டது. மீதமிருக்கும் ஒரே சீட்டுக்கு அத்தனை நெருக்கடி. ஒரு பக்கம் GK வாசன், இன்னொரு பக்கம் தம்பிதுரை நிற்கிறார்களாம். அத்துடன் அதிமுகவுக்கும் 1 MP சீட் வேண்டும் என நிர்வாகிகள் கேட்பதால் இடியாப்ப சிக்கலில் EPS இருப்பதாக பேசப்படுகிறது.


