News April 6, 2024
திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்

அரசு ஊழியர்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார். வில்லிவாக்கத்தில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை. டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடிய போது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை’ என்றார்.
Similar News
News February 7, 2026
வீட்டிலிருந்தே ஆதார் எண்ணை இணைக்கலாம்!

கேஸ் நுகர்வோர் அனைவரும் ஆதார் e-KYC-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே 75% பேர் இந்த செயல்முறையை முடித்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வீட்டிலிருந்தே இலவசமாக KYC-ஐ பூர்த்தி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
News February 7, 2026
நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது.. அடுத்தடுத்து அதிர்ச்சி

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு அவர் போதைப்பொருள் விற்றது தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் அஞ்சுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த போலீஸ், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.
News February 7, 2026
TOSS: இந்திய அணி பேட்டிங்

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் கத்துக்குட்டி அணியான USA-ஐ இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அபிஷேக், இஷான் கிஷன், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ரிங்கு, அக்ஷர், அர்ஷ்தீப், வருண், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


