India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் I.N.D.I.A கூட்டணி 8 தொகுதிகளில் இழுபறியைச் சந்திக்கும் என ரகசிய தகவலை ஆளும் தரப்புக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டாக அளித்துள்ளதாம். அதில், நான்கு தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் என்பதால் அக்கட்சிகளிடம் திமுகவின் தலைமை நேரடியாக பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து, உடனடியாக சிக்கல்களை எப்படியாவது சரிசெய்யவும் அவர்களிடம் திமுக அறிவுறுத்தியுள்ளதாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது ஆவாரம்பூ. ஆவாரம்பூவை வைத்து உடலுக்கு நன்மை தரும் சர்பத் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, ஏலக்காய், இஞ்சி துண்டுகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் ஆவாரம்பூ (ஊற வைத்தது) நீரை ஊற்றி, தேன் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், எப்போது OTT-க்கு வரும் என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த பிப்.23ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் ₹50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், உலகளவில் ₹225 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது.
டெல்லியில் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 5ஆம் தேதி வந்த பயணிகளிடம் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 2 பயணிகள், அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுமென திடீரென மிரட்டல் விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த 2 பேரையும் கைது செய்து, விமான நிலையை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலிவ் பச்சை (Olive green) நிற வாகனங்களை பதிவு செய்வதை தமிழக போக்குவரத்துத் துறை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை வாகனங்கள் மட்டுமே இந்நிறத்தை பயன்படுத்த மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்நிறத்தை ரேஞ்சர் காக்கி, எமரால்ட் பியர்ல் என வெவ்வேறு பெயர்களில் வெளியிடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக வருவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கேப்டனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவருக்கு இருப்பதாக தெரிவித்துள்ள வாகன், இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தை அவர் அடைவார் எனக் கூறியுள்ளார். நேற்றைய லக்னோ அணிக்கு எதிராக போட்டியில் கில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், வாகனின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோயாலும், மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 10இல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், இந்தியாவை ‘உலகின் புற்றுநோய் தலைநகர்’ என அழைக்கலாம் என்கின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் கழக இணை செயலாளருமான AKS அன்பழகன் (53) உடல்நலக் குறைவால் காலமானார். இவர், 2001ல் தி.மலை, பெரணமல்லூர் தொகுதி MLAவாக பதவி வகித்தார். 2006ல் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில் சீட் தராததால், அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகை கங்கனா ரணாவத், தனது புது பென்ஸ் காரில் மும்பையை வலம் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் இவர், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது அரசியல் வருகை ஏற்கெனவே சலசலப்பை கிளப்பிய நிலையில், கட்சியில் இணைந்த கொஞ்ச நாள்களிலேயே ₹2.43 கோடி மதிப்புள்ள புது காரை வாங்கியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென குறுக்கிட்டு பிரசாரத்துக்குச் செல்லக் கூடாது என்று சசிகலாவை தடுத்தாராம். இதனால், தினகரன் மன வேதனையில் உள்ளாராம்.
Sorry, no posts matched your criteria.