News April 8, 2024
விரைவில் OTT-க்கு வரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், எப்போது OTT-க்கு வரும் என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த பிப்.23ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் ₹50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், உலகளவில் ₹225 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது.
Similar News
News December 10, 2025
PM பாதி நாள் ஊரிலேயே இருப்பதில்லை: பிரியங்கா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் வேளையில், ராகுல் காந்தி ஜெர்மனி செல்கிறார் என தகவல் வெளியானதால், பாஜக அவரை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த பிரியங்கா காந்தியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், PM மோடி பாதி நாள்கள் வெளியூரில் தான் இருக்கிறார் எனவும், ஏன் அவரை நோக்கி இந்த கேள்வியை எழுப்புவதில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
News December 10, 2025
EPS உடன் செங்கோட்டையன்… கடைசி PHOTO

அதிமுகவின் முதல் பொதுக்குழுவை நடத்தி, எம்ஜிஆரிடம் பாராட்டை பெற்றவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகால அரசியலில் அவர் இல்லாமல் ஒரு அதிமுக பொதுக்குழு கூட இதுவரை நடந்ததே இல்லை. தற்போது கட்சி மாறிவிட்டதால், இன்று நடக்கும் பொதுக்குழுதான் அவர் இல்லாமல் நடக்கும் முதல் பொதுக்குழுக் கூட்டம். இந்நிலையில், EPS உடன் அவர் (KAS) கடைசியாக பங்கேற்ற பொதுக்குழுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
News December 10, 2025
அதிமுக உடன் கூட்டணி இல்லையா?

ADMK பொதுக்குழுவில் துரோகிகளால் ஆட்சியை இழந்ததாக OPS உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு சி.வி.சண்முகம் பேசியதை கைதட்டி EPS வரவேற்றார். இதன் மூலம் இருவரையும் கூட்டணியில் இணைக்க அவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதேநேரம் இருவரையும் கூட்டணியில் மீண்டும் இணைக்க, டெல்லியில் அண்ணாமலை முகாமிட்டுள்ளார். இதனால், இருவரும் கூட்டணியில் இணைவார்களா, இணையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


