News April 8, 2024

ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் பேருக்கு அரசு வேலை

image

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்ததும் முதல் நடவடிக்கையாக 30 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படுமென காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ம.பி.,யின் சியோனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பாஜகவினர் அதை உங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலை தருகின்றனரே தவிர, அரசு வேலையை தரவில்லை எனவும் சாடினார்.

News April 8, 2024

‘போட்’ பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு

image

போட் (Boat) நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் கசிந்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் ஸ்பீக்கர், ஹெட்போன், இயர்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை போட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திய 75 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததை, ஷாப்பிஃபை கை (Shopify GUY) என்ற ஹேக்கர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

News April 8, 2024

சீரடி கோயிலில் விஜய் தரிசனம்

image

சீரடி சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்ற அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 8, 2024

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் மகள் ராஜலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர். அவரது மூத்த மகள் ராஜலட்சுமி (92) வயோதிகம் காரணமாக காலமானார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

News April 8, 2024

காங்கிரஸ் செய்யாததை செய்து காட்டிய பாஜக

image

காங்கிரஸ் 30 ஆண்டுகளில் செய்யாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாமக்கல்லில் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து பேசிய அவர், விரைவில் சூப்பர் பவராக இந்தியா மாறும். 11 ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது எனக் கூறினார். மேலும், திமுகவும், காங்கிரசும் இதுவரை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றார்.

News April 8, 2024

தேர்தலுக்கு பிறகும் மத்தியப் படைகளை நிறுத்த வேண்டும்

image

தேர்தலுக்கு பிறகும், மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகளை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, கடந்த முறை தேர்தலுக்கு பிறகு வன்முறை மூண்டதாகவும், அதுபோல இம்முறை நடைபெறாமல் இருக்க மத்தியப் படைகளை தேர்தல் முடிந்தபிறகும் நிறுத்தி வைக்கும்படி ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

News April 8, 2024

தோனியை வீழ்த்த இன்னொரு தோனியாக மாறணும்

image

தோனி ஆக்ரோஷம் காட்டாமல் இருக்கலாம். ஆனால் எளிதில் வெற்றியை விட்டுவிடமாட்டார் என கொல்கத்தா அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், போட்டியின் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றாலும் களத்தில் தோனி இருந்தால் வெற்றி அவருக்கு தான். அனைத்திலும் அவரை விட நீங்கள் சிறந்தவராக இருந்தால் தான் மட்டுமே அவரை வீழ்த்த முடியுமென புகழாரம் சூட்டியுள்ளார்.

News April 8, 2024

BREAKING: பாஜக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்பு

image

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் அரசுப் பள்ளியில் உணவுத் திட்ட பொறுப்பாளருக்கு மகுடீஸ்வரன் போதையில் தொல்லை கொடுத்திருக்கிறார். காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்கிறேன் என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

கோவையில் பாஜக தான் வெற்றிபெறும்

image

செந்தில் பாலாஜியே தினமும் செல்போனில் பேசி திமுக அமைச்சர்களை இயக்குவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் இருந்து செந்தில் பாலாஜி தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுப்பதாக கூறிய அவர், தங்கச் சுரங்கத்தையே திமுக கொட்டினாலும் கோவையில் பாஜக தான் வெற்றிபெறும் எனவும் சூளுரைத்தார். மேலும், பதிவாகும் வாக்குகளில் 60% பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 8, 2024

புஷ்பா 3 படம் உறுதியானது

image

புஷ்பா 3 படம் எடுக்கப்பட இருப்பதை ஜெகபதி பாபு உறுதி செய்துள்ளார். புஷ்பா முதல் பாகம் வசூலை வாரி குவித்ததால், 2ஆம் பாகம் எடுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் புஷ்பா 3ஆம் பாக திரைப்படமும் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அது உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், தாம் அந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறி, ஜெகபதி பாபு உறுதி செய்துள்ளார்.

error: Content is protected !!