News March 27, 2024

சாதாரண தொண்டன் திமுக தலைவராக முடியுமா?

image

ஓட்டு வாங்குவதற்காகவே கட்சித் தொண்டர்களை குடும்பம் என, முதல்வர் ஸ்டாலின் கூறிவருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிமுகவில் மட்டும்தான் ஜனநாயகம் உள்ளது எனக் கூறினார். மேலும், கட்சியையும், நிர்வாகிகளையும் குடும்பமாக பார்ப்பதாக கூறும் ஸ்டாலின், திமுக தலைவராக ஒரு தொண்டனை நியமிப்பாரா எனக் வினவியுள்ளார்.

Similar News

News January 21, 2026

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு/தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற ஜன. 23 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 /9499055895 / 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

தற்கொலைக்கு சமம் என்று சொல்லிவிட்டு கூட்டணியா?

image

அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக<<18913412>> TTV தினகரன்<<>> அறிவித்துவிட்டார். இந்நிலையில் அதிமுக குறித்த அவரது கடந்த ஒரு மாதகால பேச்சுகள் தற்போது வைரலாகி வருகின்றன. EPS -உடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றும், EPS என்ற தீயசக்தி வரும் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அதே அதிமுகவுடன் TTV கூட்டணி வைத்துள்ளாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

News January 21, 2026

NDA-வில் இணைந்த தினகரனை வரவேற்ற EPS

image

NDA கூட்டணியில் இணைந்த TTV தினகரனை வரவேற்பதாக EPS தெரிவித்துள்ளார். திமுக கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்த இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கூறிய அவர், நாம் ஒன்றாக இணைந்து திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவோம் என பதிவிட்டுள்ளார். ஆனால் NDA கூட்டணியில் இணையும்போது TTV தினகரன் EPS பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!