News March 27, 2024
பட்டாசுத் தொழிலாளர்களை பாதுகாக்கவில்லை

பாஜகவால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழில், தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் என வாக்குறுதி அளித்த மோடி, அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக் கூறினார். மேலும், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என அனைவருக்கும் எதிரி பாஜக தான் என அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News January 15, 2026
சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.
News January 15, 2026
ராஜ மாதா காலமானார்

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.


