News April 8, 2024

IPL: CSK அணி வீரர்கள் மாற்றம்

image

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அணியில் சில மாற்றம் செய்யப்பட்டு முஸ்தஃபிசுர், ஷர்துள், ரிஸ்வி ஆகியோர் களமிறங்குகின்றனர். மொயின் அலி, சிவம் டூபே, தீபக் சாஹர் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. விளையாடும் வீரர்கள்: ரச்சின், ருதுராஜ், ரஹானே, மிச்சேல், ரிஸ்வி, ஜடேஜா, தோனி, ஷர்துள், முஸ்தஃபிசுர், தேஷ்பாண்டே, தீக்ஷனா.

News April 8, 2024

SSC தேர்வுகள் தேதி வெளியானது

image

பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தும் தேர்வுகள் மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் காரணமாக தேர்வுகள் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூனியர் இஞ்சினியர் தேர்வுகள் ஜூன் 5,6,7 ஆகிய தேதிகளிலும், Selection Post தேர்வுகள் ஜூன் 24,25,26 ஆகிய தேதிகளிலும், மத்திய ஆயுதப்படை, டெல்லி போலீஸ் (SI) தேர்வுகள் ஜூன் 27,28,29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

News April 8, 2024

IPL: சென்னை அணி பவுலிங்

image

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் CSK – KKR அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற CSK கேப்டன் ருதுராஜ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் KKR அணி பேட்டிங் செய்ய உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற CSK, அதன்பின் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?

News April 8, 2024

பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது?

image

பொறியியல் படிப்புக்கான கட்டணம் 25% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால், வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் ₹50000, நிர்வாக ஒதுக்கீட்டில் ₹85000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

News April 8, 2024

நான் எந்த கட்சியிலும் இல்லை

image

நான் எந்த கட்சியிலும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை என நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் தத் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், “நான் அரசியலுக்கு வர முடிவு எடுத்தால், நிச்சயம் அதை அறிவிப்பேன். என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 8, 2024

குழப்பத்தை ஏற்படுத்தவே தினகரன் தேர்தலில் போட்டி

image

மக்களை குழப்பவும், அதிமுகவை சின்னாபின்னமாக்கவும் டிடிவி தினகரன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார். தேனி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. ஏழைகளுக்கு பாஜக எதையும் செய்யவில்லை. ஓபிஎஸ் தெருவுக்கு தெரு தர்ம யுத்தம் நடத்துகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

சற்று நேரத்தில் சூரிய கிரகணம். உடனே இதை பண்ணுங்க

image

சூரியனை நிலவு மறைக்கும் முழு சூரிய கிரகணம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இதனை இந்தியாவில் இருந்து காண முடியாது என்பதால் பலர் அதிக நாட்டம் கொள்வதில்லை. இருப்பினும், நம்பிக்கை இருப்போர், தர்ப்பை புற்களை உணவில் போட்டு வைக்கலாம், வீட்டில் அடுப்பை பற்ற வைக்காமல் இருப்பது நல்லது, கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்கலாம், வீட்டிலேயே இறைவனுக்கு பூஜைகள் செய்யலாம். இரவு 9.12 மணி முதல் 1.30 வரை கிரகணம் நடைபெறும்.

News April 8, 2024

பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்

image

தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்திவரும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. ஏற்கெனவே புகார் அளிக்கப்பட நிலையில் மீண்டும் ராணுவம் குறித்து பிரதமர் பேசி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காங்., தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பிரதமர் விமர்சித்ததற்கு எதிராகவும் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

News April 8, 2024

சென்னை அதி வெப்பமாக இருப்பது ஏன்?

image

ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.

News April 8, 2024

இன்ஸ்டா பதில் பதிவுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

image

திரைப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காதல் போஸ்ட் போட்டு வருவது இப்போது பேசும் பொருளாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா தனது குறிப்பில், “என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு நன்றி” என எழுதியது இருவரது ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அதற்கு விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்ன பதில் வரும் அவரை பின்தொடரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

error: Content is protected !!