News April 8, 2024

குழப்பத்தை ஏற்படுத்தவே தினகரன் தேர்தலில் போட்டி

image

மக்களை குழப்பவும், அதிமுகவை சின்னாபின்னமாக்கவும் டிடிவி தினகரன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார். தேனி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. ஏழைகளுக்கு பாஜக எதையும் செய்யவில்லை. ஓபிஎஸ் தெருவுக்கு தெரு தர்ம யுத்தம் நடத்துகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

லிப் பாம் போடுவீங்களா? இத கண்டிப்பா கவனிங்க!

image

உதடுகளை பராமரிக்க பயன்படுத்தும் லிப் பாமை வாங்கும்போது, இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். *உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர் உள்ளதா என பார்க்க வேண்டும் *SPF இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்கவும் *செயற்கை வாசனை மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம் *நீண்ட நேரம் நீடிக்கும் லிப் பாமை வாங்குங்கள். SHARE

News December 14, 2025

அமெரிக்காவில் ஓயாத துப்பாக்கிச்சத்தம்!

image

கடந்த வாரம் தான் USA-வின் கென்டக்கி பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலை.,யில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்னும் பிடிபடாததால், மேலும் துப்பாக்கிச்சூடு நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

News December 14, 2025

BREAKING: விலை சரசரவென்று குறைந்தது

image

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கோழிக்கறி விலை Kg-க்கு ₹5 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹114-க்கும், முட்டைக்கோழி ₹100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் விலை.

error: Content is protected !!