India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொறியியல் படிப்புக்கான கட்டணம் 25% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால், வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் ₹50000, நிர்வாக ஒதுக்கீட்டில் ₹85000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நான் எந்த கட்சியிலும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை என நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் தத் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், “நான் அரசியலுக்கு வர முடிவு எடுத்தால், நிச்சயம் அதை அறிவிப்பேன். என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களை குழப்பவும், அதிமுகவை சின்னாபின்னமாக்கவும் டிடிவி தினகரன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார். தேனி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. ஏழைகளுக்கு பாஜக எதையும் செய்யவில்லை. ஓபிஎஸ் தெருவுக்கு தெரு தர்ம யுத்தம் நடத்துகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.
சூரியனை நிலவு மறைக்கும் முழு சூரிய கிரகணம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இதனை இந்தியாவில் இருந்து காண முடியாது என்பதால் பலர் அதிக நாட்டம் கொள்வதில்லை. இருப்பினும், நம்பிக்கை இருப்போர், தர்ப்பை புற்களை உணவில் போட்டு வைக்கலாம், வீட்டில் அடுப்பை பற்ற வைக்காமல் இருப்பது நல்லது, கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்கலாம், வீட்டிலேயே இறைவனுக்கு பூஜைகள் செய்யலாம். இரவு 9.12 மணி முதல் 1.30 வரை கிரகணம் நடைபெறும்.
தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்திவரும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. ஏற்கெனவே புகார் அளிக்கப்பட நிலையில் மீண்டும் ராணுவம் குறித்து பிரதமர் பேசி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காங்., தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பிரதமர் விமர்சித்ததற்கு எதிராகவும் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.
திரைப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காதல் போஸ்ட் போட்டு வருவது இப்போது பேசும் பொருளாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா தனது குறிப்பில், “என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு நன்றி” என எழுதியது இருவரது ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அதற்கு விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்ன பதில் வரும் அவரை பின்தொடரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் காங்கிரஸ், I.N.D.I.A கூட்டணி கடும் கோபத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தரில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘மக்களின் 500 ஆண்டு கனவு நனவாகியுள்ளது. ஆனால் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை அழைப்பிதழை காங்கிரஸ் நிராகரித்தது மட்டுமின்றி, அதை தவறு என கூறிய காங்கிரஸ் தலைவர்களையும் அக்கட்சியில் இருந்தே நீக்கியது’ என்றார்.
தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 மற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்களான ஏப்ரல் 17, 18 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளன.
நடிகை நித்யா மேனன் இன்று தனது 38ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் ‘DearEXes’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் & போப்டர் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் காமினி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.