India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவ கிரகங்களில் அரசனான சூரிய பகவான் ஏப்ரல் 13ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு குரு பகவானும் இருப்பதால் மேஷம், கன்னி, விருச்சிகம், மகர ராசியினருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகிறது. சுய தொழில் செய்வோருக்கு நல்ல லாபம், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்னை முடிவுக்கு வருவது, வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் யோகம் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப் போகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிராக பொறுமையாக ஆடிவரும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் அடிக்கும் முதலாவது அரை சதமாகும். CSK அணி தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் 96/1 ரன்கள் எடுத்துள்ளது. CSK வெற்றிபெற இன்னும் 42 ரன்கள் தேவை உள்ள நிலையில் கைவசம் 8 ஓவர்கள் உள்ளது. மிச்செல் 25* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று CSK வெற்றிபெறுமா?
வீட்டில் ‘அவசரம்’ எனக் கூறி அலுவலகத்தில் அனுமதி வாங்கி விரைவாக கிளம்பிய பெண், ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்று மேனேஜரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். RCB அணியின் வெறித்தனமான ரசிகை கிரிக்கெட் பார்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். ஆனால், மைதானத்தில் அவர் இருந்ததை அவரது மேனேஜர் டிவியில் பார்த்துள்ளார். அந்தப் புகைப்படத்தை மேனேஜர் அவருக்கு பகிரவே, அதை அந்தப் பெண் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட் நாளை (ஏப்.9) தீர்ப்பு வழங்குகிறது. மார்ச் 21இல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் மனு மீது நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.
கொல்கத்தா அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய CSK வீரர் ஜடேஜா ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இன்று 2 கேட்ச்களை பிடித்த அவர், ஐபிஎல்லில் 100 கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி (110) முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரெய்னா (109), போலார்ட் (103), ரோஹித் சர்மா (100), ஜடேஜா (100), தவான் (98) ஆகியோர் உள்ளனர்.
பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என பிரதமர் மோடி கூறியதை கிண்டல் செய்யும் விதமாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி X தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், இப்போது 400 என்கிறார்கள், மே மாதம் அது 250 ஆக குறையும். ஜூனில் 175 – 200 ஆக இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையைக் கூறுகிறேன். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காதீர்கள் என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 போட்டிகளில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள்…
*ஜடேஜா(CSK)-36 ரன்கள் (Vs RCB 2021)
*R ஷெப்பர்ட்(MI)-32 ரன்கள் (Vs DC 2024)
*ரிங்கு சிங்(KKR)-30 ரன்கள் (Vs GT 2023)
*ஷ்ரேயஸ் ஐயர்(DC)-28 ரன்கள் (Vs KKR 2018)
*ஹர்திக் பாண்டியா(MI)-28 ரன்கள் (Vs RPS 2017)
*ஆர்ச்சர்(RR)-26 ரன்கள் (Vs CSK 2020)
*டிவில்லியர்ஸ்(RCB)-26 ரன்கள் (Vs PWI 2013)
*ரிஷப் பந்த்(DD)-26 ரன்கள் (Vs SRH 2018)
ஆட்சியில் இருக்கும் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இழிவுப்படுத்திய இபிஎஸ் தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, 2003ஆம் ஆண்டு ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சி தான் என திமுக விமர்சித்துள்ளது.
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் <
ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 94 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பரவிவரும் காலரா நோய்க்கு பயந்து மக்கள் அங்கும் இங்கும் இடம் மாறி வருகின்றனர். அதற்காக லைசன்ஸ் இல்லாத படகு ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது. நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 26 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Sorry, no posts matched your criteria.