News April 8, 2024

அரை சதம் கடந்தார் ருதுராஜ்

image

கொல்கத்தா அணிக்கு எதிராக பொறுமையாக ஆடிவரும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் அடிக்கும் முதலாவது அரை சதமாகும். CSK அணி தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் 96/1 ரன்கள் எடுத்துள்ளது. CSK வெற்றிபெற இன்னும் 42 ரன்கள் தேவை உள்ள நிலையில் கைவசம் 8 ஓவர்கள் உள்ளது. மிச்செல் 25* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று CSK வெற்றிபெறுமா?

Similar News

News December 13, 2025

அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்

image

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனே அமல்படுத்த கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் 2026 ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் ஊழலை கண்டித்து கடந்த 2011-ல் டெல்லியில் இவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதால், மத்தியில் காங்., ஆட்சி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2025

பாகிஸ்தானில் மகாபாரத, சமஸ்கிருத படிப்புகள்

image

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக சமஸ்கிருத இலக்கிய படிப்பு, லாகூர் பல்கலைகழகத்தில் (LUMS) கற்பிக்கப்பட தொடங்கியுள்ளன. இதோடு சேர்த்து பகவத் கீதை, மகாபாரதத்தின் சில முக்கிய பகுதிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ஷாகித் ரஷீத், அடுத்த 10-15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து பகவத் கீதை, மகாபாராத அறிஞர்கள் வெளிவருவார்கள் என தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 13, கார்த்திகை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!