News March 26, 2024

BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்

image

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கி.மீ., தூரம் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மிகப்பெரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News March 26, 2024

இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் உயர்வு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதன்படி ரூபாயின் மதிப்பு 29 பைசா அதிகரித்து ₹83.32 ஆக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 48 பைசா வரையில் ரூபாயின் மதிப்பு சரிந்து ₹83.61ஆக இருந்தது. இந்நிலையில், இன்றைய இண்ட்ரா டே வர்த்தகத்தின் தொடக்கத்தில் உள்நாட்டு மதிப்பு, ₹83.32 ஆக தொடங்கியுள்ளது.

News March 26, 2024

அடுத்தவர் குடும்பத்தை தயவு செய்து கெடுக்க வேண்டாம்

image

புகழுக்காகவும் பணத்திற்காகவும் அடுத்தவர் குடும்பத்தைப் பற்றி பேச வேண்டாம் என மதுரை முத்துவின் மனைவி நீத்து தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு திரைப் பிரபலங்களின் வாழ்விலும் சொல்ல முடியாத பல பிரச்னைகள் உண்டு. நானும், முத்துவும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் கலையை ரசியுங்கள். எங்கள் வீட்டு ஜன்னலை எட்டி பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார். முன்னதாக நீத்துவை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி இருந்தனர்.

News March 26, 2024

தோனி மீதான அன்பை கண்டு வியந்த ரச்சின்

image

தோனி மீதான ரசிகர்களின் அன்பு தன்னை வியக்கச் செய்வதாக சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எப்போதெல்லாம் தோனி மைதானத்திற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று ஆர்ப்பரிக்கிறார்கள். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. பல நேரங்களில் இதை நினைத்து வியப்படைகிறேன். தோனி மீது மக்கள் வைத்துள்ள அன்பு தனித்துவமானது” என்று தெரிவித்தார்.

News March 26, 2024

சிறையில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவு

image

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய உத்தரவில், டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபடுமாறும், மொஹல்லா மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 26, 2024

CSKvsGT: ரசிகர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு

image

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள், தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். அதேபோல், மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News March 26, 2024

‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்பு?

image

கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதால், அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கமல் ஈடுபட்டிருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக முதலில் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலக, அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினார்.

News March 26, 2024

”மகளிர் உரிமைத் தொகை ₹1500ஆக உயரும்”

image

நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதான், திமுக அரசு தகுதியான குடும்ப பெண்களுக்கு மாதம் ₹1000 மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக அண்ணாமலை விமர்சித்தார். அதுவும், 100 பெண்களில் 30 பேருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. ஆனால், பாஜக வெற்றி பெற்றால், அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை ₹1000இல் இருந்து ₹1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் யார்?

image

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஆனால், தற்போது வரை மயிலாடுதுறை வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. தமிழகத்தில் நாளையுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், காங்., கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவுத் தலைவராக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

News March 26, 2024

உலக பணக்காரர்கள் பட்டியிலில் இணைந்த டிரம்ப்

image

உலகின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இணைந்துள்ளார். அவர் மீதான நிதி மோசடி வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியதால், பங்குச்சந்தையில் டிரம்ப் நிறுவனங்களின் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் நிகர மதிப்பு ₹33,340 கோடிக்கும் அதிகமானது. இதனால், ₹54,175 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் டிரம்ப் இணைந்தார்.

error: Content is protected !!