News April 8, 2024
இரவு உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடலாமா?

இரவு நேரங்களில் நாம் பழங்களை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த கூடும். இது தவிர சூரிய அஸ்தமனத்திற்கு பின் நமது வளர்சிதை மாற்றம் குறையும். கார்போ ஹைட்ரேட்டுகளை எளிதில் ஜீரணிக்க முடியாது. எனவே சூரியன் மறைந்த பிறகு பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதே போல, இரவு உணவுக்கு பின் டீ, காபி, குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
Similar News
News December 13, 2025
ஐசிசி விருது பெறுகிறாரா கிங் கோலி?

2025-ம் ஆண்டுக்கான சிறந்த ODI வீரருக்கான விருது பட்டியலில் கோலி இடம்பிடித்துள்ளார். 2025-ல் 651 ரன்கள் எடுத்துள்ளதோடு அதிக சதமடித்த (52) வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2017, 2018, 2023-லும் இவ்விருதை கோலி பெற்றுள்ளார். பட்டியலில் ஜோ ரூட், ஹோப், மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். 650 ரன்கள் அடித்தும் பட்டியலில் ரோஹித் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News December 13, 2025
FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம், வெள்ளி விலை இந்த வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், சென்னையில் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹98,960 ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் (டிச.6-ல் 1 சவரன் ₹96,320) ஒப்பிடுகையில் ₹2,640 அதிகமாகும். தங்கத்திற்கு சற்றும் சளைக்காமல், வெள்ளி விலை இந்த வாரத்தில் மட்டும் ₹11,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிலோ வெள்ளி ₹2.10 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது.
News December 13, 2025
இது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: ராகுல்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்., தலைமையிலான UDF கூட்டணி கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இது ஒரு தீர்க்கமான தீர்ப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரளாவில் UDF மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான சிறப்பான அறிகுறியாக இந்த தேர்தல் முடிவு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல், இது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


