News March 29, 2024

பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 29) ஈரோட்டில் பரப்புரையை தொடங்குகிறார். தொடர்ந்து, மார்ச் 30- சேலம், ஏப்.2- திருச்சி, ஏப்.6- ஸ்ரீபெரும்புதூர், சென்னை, ஏப்.7- சென்னை, ஏப்.10 – மதுரை, ஏப்.11- தூத்துக்குடி, ஏப்.14- திருப்பூர், ஏப்.15- கோவை, ஏப்.16- பொள்ளாச்சி என மொத்தம் 11 நாட்களாக திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

News March 29, 2024

பாஜக கூட்டணிக்கு கேட்கும் சின்னம் கிடைக்கிறது

image

தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைப்பதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் கேட்கும் சின்னம் கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிவதாகவும் அவர் சாடினார். மேலும், 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி வாக்கு பெற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

News March 29, 2024

21,000 ரவுடிகளை கண்காணிக்கும் போலீஸ்

image

தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் 21,000 ரவுடிகளை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் காவல்துறை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் நடைபெறுகின்றன. இதில் பிரசாரம், வாக்காளர்களை மிரட்டுவது போன்ற செயலில் ரவுடிகள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக, 21,000 ரவுடிகளை கண்காணித்து வருகிறது.

News March 29, 2024

என்னை நினைத்து என் தாய் பெருமைப்படுவார்

image

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆட்டநாயகன் விருது வென்ற அவர், தனது தாயை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். என் அம்மா இங்கே இருக்கிறார். கடந்த 3-4 ஆண்டுகளாக என் தடுமாற்றங்களைப் பார்த்தவர் அவர். நிச்சயம் இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார் என்று தெரிவித்தார்.

News March 29, 2024

பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை

image

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

News March 29, 2024

சூர்யாவுக்கு பதில் விஜய் சேதுபதி

image

சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க நலன் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். சூர்யாவை வைத்து ‘தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் இப்படம் உருவாக இருந்தது. எனினும், படம் தொடங்கப்படவே இல்லை. இதனிடையே, சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் என்பவர் இயக்கினார். இந்நிலையில், சூர்யாவுக்கு எழுதிய கதையை வைத்து சூது கவ்வும் மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து நலன் இயக்க உள்ளார்.

News March 29, 2024

ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு

image

கேரள ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள அரசின் கோடைகால பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான குலுக்கலில் 308797 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த லாட்டரியை கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாசர் வாங்கியது தெரிய வந்துள்ளது.

News March 29, 2024

திரைப்பட விநியோகஸ்தரான விஷால்

image

திரைப்பட விநியோகஸ்தராக நடிகர் விஷால் புதிய அவதாரமெடுத்துள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் “ரத்னம்” படத்தின் நாயகனாக அவர் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தின் விநியோகஸ்தராகவும் அவர் மாறியிருக்கிறார். தாமிரபரணி படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் தாம் நடிக்கும் ரத்னம் படம் மூலம் தனது இமேஜ் மீண்டும் நிலை நிறுத்தப்படும் என்று அவர் செல்லுமிடமெல்லாம் தெரிவித்து வருகிறார்.

News March 29, 2024

ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்

image

தேர்தல் விதிகளால் வணிகர்களுக்கு பாதிப்பு தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம் நடக்கும் என வணிகர் சங்க பேரமைப்புதலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நடைமுறையால் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தேர்தல் செலவினம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கத் தொகை உயர்த்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

News March 29, 2024

முஸ்லீம்களை 2ம் தர குடிமக்களாக்கவே சிஏஏ சட்டம்

image

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை 2ம் தர குடிமக்களாக்கும் இலக்குடனேயே சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், “மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்கும் ஆயுதமே சிஏஏ சட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!