India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவின் தவறான ஆட்சியை கண்டு தமிழக மக்கள் சலிப்படைந்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தலில் கடினமாக உழைக்கும் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு பேசவுள்ளேன். திமுகவின் தவறான ஆட்சியை கண்டு தமிழக மக்கள் சலிப்பில் உள்ளனர். பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் பார்க்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை ஜூன் மாதம் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்காக வீரர்களை தேர்வு செய்யும் பணியில் தேர்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ள 11 வீரர்கள் பட்டியலை ஸ்போர்ட்ஸ்டார் சமீபத்தில் வெளியிட்டது. அதில் ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, சூர்யா, ரிங்கு, ஹர்திக், ஜூரல், ஜடேஜா, அக்சர், பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ளனர்.
ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். நெல்லையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், அது சாதாரண நிகழ்வு என்றும், நாதக வெற்றி பெற்றால் அது சரித்திரம் எனவும் கூறினார். மேலும், அதிகார பரவலாக்கம் என்பதே நாதக கொள்கை என்றும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மலர நாதக வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனக்கு ரூ.9.79 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எனது பெயரில் ரூ.1,11,33,138 மதிப்பு அசையும் சொத்து, ரூ.7,80,99,707 மதிப்பு அசையா சொத்து உள்ளன. மனைவி பெயரில் ரூ.10,17,694 மதிப்பு அசையும் சொத்து, ரூ.76,99,838 அசையா சொத்து உள்ளன. ரூ.1,52,85,26 கடன் உள்ளது. 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், பைக், கார்களில் வருவோருக்கு பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன.
திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. பொன்னேரி அரசு மருத்துவமனை முதல்தர மருத்துவமனையாக மாற்றப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு 50% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை மெட்ரோ சேவை விரிவுப்படுத்தப்படும். மீனவர் சமூக மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர். மீனவர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவித்துள்ளது.
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையை மத்திய அரசு முன்கூட்டி கணித்து வருகிறது. இது குறித்து நுகர்வோர் நலத்துறை செயலர் ரோகித் குமார் சிங், ‘மத்திய அரசு தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையை 30, 45 மற்றும் 60 நாட்களுக்கு எவ்வாறு இருக்குமென முன்கூட்டியே கணித்து வருகிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை இலங்கையுடனும் பகிர்ந்து கொள்ள உள்ளோம்’ என்றார்.
மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்த 1.60 கோடி பேரில், தற்போது 1.16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். தேர்தலுக்கு பின், விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் (44 லட்சம்) உரிமைத்தொகை வழங்கப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார். ₹1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என அமைச்சர்களிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர். இது திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு விமானச்சேவை நிறுவனமான ஆகாசா ஏர்லைன்ஸ், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ மும்பையில் இருந்து குவைத், ஜெட்டா மற்றும் ரியாத்திற்கு விமானங்களை இயக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. வரும் மாதங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்த உள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணையமைச்சரும், நீலகிரி வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உதகையில் அவர் சில கோயில்களுக்கு சென்றதாகவும், அனுமதியின்றி பரப்புரை கூட்டம் நடத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.