India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால், ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமரானால், தேர்தல்கள் நடக்காது; மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இந்தியா முழுதும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனக் கூறினார்.
தமிழகத்தில் நாதக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம் (வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழ்நாடு வங்கி ஏற்படுத்துவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அவர் இன்றுவரை வங்கியை ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாதென அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது, ஓபிஎஸ்சும், அவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, கட்சிக்கு எதிராக ஓபிஎஸ்சின் சில செயல்பாடுகள் இருந்ததாகவும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கருதியதே பிரிந்ததற்கு காரணம் என்றும் பதிலளித்தார்
திண்டுக்கல், கொடைக்கானல், திருவாரூரில் குடவாசல், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெப்பம் தணியும் என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பாஜகவை அழிப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் சொல்லச் சொல்ல தமிழ்நாட்டில் தாங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறோம் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “திருமாவளவன் போன்றவர்கள் பாஜகவை அழிப்போம் என பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யார், யாரை அழிக்கிறார்கள் என்பதை ஜூன் 4ஆம் தேதி பார்க்கலாம்” எனக் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அங்குள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 29 கம்பார்ட்மெண்ட்களிலும் கூட்டம் நிரம்பி, அரை கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு சுமார் 18 மணி நேரம் ஆனது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வந்ததே காரணமாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள PVR-INOX திரையரங்குகளில், மலையாள படங்களை வெளியிடப்போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மலையாள சினிமாவுக்கு, பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நேற்று, ‘ஆவேஷம்’ உள்ளிட்ட 3 முக்கிய படங்கள் வெளியாகியுள்ளது.
ரஷித் கானைப் போன்ற வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் என GT அணியின் கேப்டன் சுப்மன் கில் மனம் திறந்து பாராட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “RR அணிக்கு எதிரான லீக் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ய விரும்பினேன். ஆனால், அதற்குள் அவுட் ஆகி விட்டேன். ரஷித்தும், திவாட்டியாவும் சிறப்பாக ஆடினர். கடைசி பந்தில் ஆட்டத்தை வெல்வது ஒரு அற்புதமான உணர்வு” எனக் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிவராமன், “பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின் போக்கு முழுக்க திமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது. இது குறித்து கேட்டதற்கு அதிமுக தங்களை உதாசீனப்படுத்தியது” என குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கும், இபிஎஸ்ஸுக்கும் தொலைநோக்கு சிந்தனை உள்ளதா?, இரு கட்சிகளுக்கும் திட்டமிடுதல் என்பதே கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவர் செய்த சாதனைகளை கூறும் அரசியலாக இருக்க வேண்டும். எனவே, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.