News April 12, 2024
BREAKING: மழை பெய்கிறது

திண்டுக்கல், கொடைக்கானல், திருவாரூரில் குடவாசல், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெப்பம் தணியும் என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல்லில் ரூ.61 லட்சம் மோசடி!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே விவசாய நிலம் விற்பதாக கூறி, கரூரைச் சேர்ந்த வக்கீல் தனசேகரனிடம் ரூ.61 லட்சம் மோசடி செய்ததாக சத்தியமூர்த்தி, ஹேமலதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பெண் உள்பட இருவரை கைது செய்தனர். ரூ.75 லட்சத்தில் நிலம் விற்பதாக கூறி முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.64 உயர்ந்து $4,137-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று (நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்து, ₹93,600 -க்கு விற்பனையானது. SHARE.
News November 12, 2025
கூண்டோடு கட்சியில் இணைந்தனர்

கடந்த செப்டம்பரில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ (NMMK) என்ற புதிய கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் NMMK-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின் பி.எல்.ஏ.ஜெகநாத் பேசுகையில், ஒத்த கருத்துடைய கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.


