News April 12, 2024

ஆட்சிக்கு வந்தால் தமிழர் வைப்பகம் ஏற்படுத்துவேன்

image

தமிழகத்தில் நாதக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம் (வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழ்நாடு வங்கி ஏற்படுத்துவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அவர் இன்றுவரை வங்கியை ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.

Similar News

News November 17, 2025

தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News November 17, 2025

தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

image

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.

News November 17, 2025

ராணிப்பேட்டையில் சொந்த வீடு கனவா…? CLICK NOW

image

ராணிப்பேட்டையில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!