India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத்தில் 2014, 2019 தேர்தல்களைப் போல 26 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியைப் பெற பிரதமர் மோடி தீவிரமாக முயற்சிக்கிறார். கடந்த 2 நாட்களாக சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இம்முறை வெற்றிக் கணக்கைத் தொடங்க முடிவெடுத்துள்ள காங்கிரஸ், பிரியங்காவை களம் இறக்கிவிட்டுள்ளது. அங்கு மே7இல் தேர்தல் நடைபெறுகிறது.
திருச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பு பிரச்னை, அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தமருகில் வந்தபோது, அதன் தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது. இது பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது விழுந்தது. வலியில் துடித்த அவரை, சக பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு’ மற்றும் வெப்ப அலைக்கான ‘மஞ்சள்’ என ஒரே நேரத்தில் 2 எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, சேலம், திருச்சி, திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் முன்பே ஆஜராகி இருந்தால் 6 மாதத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டிருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார். ED பலமுறை அழைத்தும் கெஜ்ரிவால் விசாரணைக்கு வர மறுத்ததாக தெரிவித்த அவர், இந்த வழக்கில் பாஜக எந்த விதத்திலும் தலையிடவில்லை என்றார். திகார் சிறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கெஜ்ரிவாலை கொல்ல சதி என்பது நகைச்சுவை என்றும் அவர் கூறினார்.
கோட்டக் மஹிந்திரா வங்கியில் 29 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மணியன் ராஜினாமா செய்ததையடுத்து, அதன் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 4.38% வரை சரிந்ததால், அந்நிறுவனத்தின் பங்குகள் 52 வாரத்தில் இல்லாத அளவில் ரூ.1,552ஆக குறைந்தது. இந்த வங்கியின் லாபம் அடுத்த ஒன்றரை வருடத்துக்கு குறைவாக இருக்கும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல் குவாரியில் நடந்த பயங்கர வெடி விபத்து குறித்து FIRஇல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் வெடிமருந்து இருந்த வேனையும், நைட்ரஜன் இருந்த வேனையும் அருகருகே வைத்து, அவற்றை இறக்கியதாலேயே விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெடி மருந்துகளை பணியாளர்கள் கையாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோடை வெயில் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். பீர் உற்பத்தியை தமிழக அரசு அதிகரித்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், டாஸ்மாக்கில் திட்டமிட்டு பீர் விற்பனையை அதிகரிக்கவில்லை. கோடை காலத்தில் மற்ற மது வகைகளின் விற்பனை குறைந்து, பீர் விற்பனை அதிகரித்தது என்று விளக்கமளித்தார்.
காங்கிரஸ் அரசு அதானிக்கானதல்ல, இந்தியாவுக்கானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வீட்டைப் பறித்துவிடும், எருமையைப் பறித்துவிடும், தாலியைப் பறித்துவிடும் என பிரதமர் மோடி விரக்தியின் விளிம்பில் பேசுவதாகத் தெரிவித்த அவர், காங்கிரஸ் அரசு மக்களிடம் எதையும் பறிக்காது என்றும், மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக வீணாக்கிய பணத்தை மக்களுக்கு எடுத்துக் கொடுக்கும் எனவும் கூறினார்.
வேதாந்தா குழுமம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் ₹1.66 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அவர், தேர்தலுக்கு பிறகு வெளிநாட்டினரின் முதலீடு அதிகரிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும் அந்நிறுவனத்திற்கு மொத்தமாக ₹1,200 கோடி கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக வெப்பம் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் உள் கர்நாடகா, ஒடிஷா, ஜார்கண்ட், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிக வெப்பமான ஆண்டாக 2024 மாறி வருகிறது.
Sorry, no posts matched your criteria.