News May 2, 2024
காங். ஆட்சி அதானிக்கானதல்ல; இந்தியாவுக்கானது

காங்கிரஸ் அரசு அதானிக்கானதல்ல, இந்தியாவுக்கானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வீட்டைப் பறித்துவிடும், எருமையைப் பறித்துவிடும், தாலியைப் பறித்துவிடும் என பிரதமர் மோடி விரக்தியின் விளிம்பில் பேசுவதாகத் தெரிவித்த அவர், காங்கிரஸ் அரசு மக்களிடம் எதையும் பறிக்காது என்றும், மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக வீணாக்கிய பணத்தை மக்களுக்கு எடுத்துக் கொடுக்கும் எனவும் கூறினார்.
Similar News
News December 13, 2025
டி20 -ல் சாதனை.. ஒரே போட்டியில் 7 விக்கெட்கள்

பஹ்ரைன் வேகப்பந்து வீச்சாளர் அலி தாவூத், டி20-ல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பூடானுக்கு எதிரான போட்டியில், 19 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், டி20-ல் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், மலேசிய வீரர் ஷியஸ்ருல் இத்ருஸ் (7/8) முதலிடத்திலும், சிங்கப்பூர் வீரர் ஹர்ஷா பரத்வாஜ் (6/3) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
News December 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 548 ▶குறள்: எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
▶பொருள்: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
News December 13, 2025
‘படையப்பா’ படத்தின் Bare-Body சீன் பற்றிய சுவாரஸ்யம்

‘படையப்பா’ படத்தில் வரும் Bare-Body சீன் குறித்து சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். வெற்று உடம்போடு நடிக்க போவதாக ரஜினி சார் சொன்னார். அது கேவலமாக இருக்கும் என்று சொன்னேன். அதை கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றவர், அந்த சீனில் நடித்தார். அதை பார்த்து பிரமிப்பு அடைந்தபோது, சின்ன வயசுல மூட்டை தூக்கி வளந்த உடம்பு இது என ரஜினி கூறியதாக கனல் கண்ணன் நினைவுகூர்ந்துள்ளார்.


