News May 2, 2024
கல் குவாரி வெடி விபத்திற்கு காரணம் என்ன?

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல் குவாரியில் நடந்த பயங்கர வெடி விபத்து குறித்து FIRஇல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் வெடிமருந்து இருந்த வேனையும், நைட்ரஜன் இருந்த வேனையும் அருகருகே வைத்து, அவற்றை இறக்கியதாலேயே விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெடி மருந்துகளை பணியாளர்கள் கையாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
உங்களுக்கு ப்ரோமோஷன் வேண்டுமா? இதுதான் முக்கியம்!

70-20-10 என்ற முறையில்தான் ப்ரோமோஷனுக்காக பரீட்சை நடக்கிறது. இதில் 70% பணி அனுபவம், 20% புதிய ஆலோசனைகளை வழங்குவது, 10% பாடங்கள் வழி கற்கும் திறன் போன்றவை அடங்கும். இதுமட்டுமல்லாமல், ப்ராஜெக்ட்டை கையாளுதல், அணியை நிர்வகித்தல், ஜூனியருக்கு ஆலோசனை&பயிற்சி வழங்குதல், நெருக்கடி நேரத்தில் எடுக்கும் முடிவு போன்றவற்றில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்கிறார்கள்.
News December 8, 2025
மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக நீடித்த மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை(டிச.9) மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் கவனமாக இருங்கள்!
News December 8, 2025
பிரபல நடிகர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய மகள்

டிச.8.. இந்நாளில் பாலிவுட் ஹீ-மேன் தர்மேந்திராவின் மும்பை வீடு ஆரவாரத்தால் நிரம்பி இருக்கும். ஆனால், அண்மையில் அவர் மறைந்ததால் மொத்த காட்சியும் மாறிவிட்டது. தர்மேந்திராவின் பிறந்த நாளான இன்று, அவரது இல்லமும், குடும்பத்தினரின் உள்ளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ‘மிகுந்த வலியுடன் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அப்பா. உங்களை பத்திரமாக இதயத்தில் வைத்திருப்பேன்’ என மகள் ஈஷா உருக்கமுடன் SM-ல் பதிவிட்டுள்ளார்.


