News May 3, 2024

ஏழைகளின் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு

image

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிலும் வெப்பம் அதிகரிப்பால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 20% விடுதிகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் விடுதிகளிலும் 40% முதல் 60% வரை வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.

News May 3, 2024

வளைகாப்புக்குச் சென்ற பெண் உயிரிழந்த சோகம்

image

சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காகச் சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவைத் திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாயச் சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின் உடலை அவரது பெற்றோர் 8 கிமீ தேடி அலைந்தனர். இது தொடர்பாக RDO விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News May 3, 2024

‘ஆவேஷம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

ஜித்து மாதவன் இயக்கிய ‘ஆவேஷம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபகத் பாசில், சஜின் கோபு, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, “இலுமினாட்டி…” பாடல் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படம் வரும் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாகவும் இது போற்றப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு “லிங்கன் புக் ஆஃப்” ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்

image

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகித்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் பேரனே உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் இளைஞரின் தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News May 3, 2024

தமிழக மீனவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்

image

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதால், கடல் மட்டம் உயர்ந்து உப்பு நீர் உட்புகுந்து, கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படுகிறது. இதனால், மீன் இனங்கள் இடம் பெயர்வதால், இனிவரும் காலங்களில் நாகர்கோவில், தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மிகப்பெரிய சிக்கலைச் சந்திப்பார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 3, 2024

ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, கிராம் ரூ.87க்கும், கிலோ ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.

News May 3, 2024

அமேதி மீண்டும் காங்கிரஸ் வசமாகுமா?

image

தற்போது பாஜக வசம் உள்ள அமேதி தொகுதி, முன்பு காங். கோட்டையாக இருந்தது. 1967, 1971 தேர்தல்களில் காங். சார்பில் வித்யாதர் பாஜ்பாய் வெற்றி பெற்றார். 1980 தேர்தலில் சஞ்சய் காந்தி, 1981 – 1991 வரை ராஜிவ் காந்தி, 2004 – 2014 வரை ராகுல் காந்தி எம்பியாக இருந்தனர். 1977, 1998 தேர்தல்களில் தோற்று, மீண்டும் கைப்பற்றியதைபோல, இத்தேர்தலில் அத்தொகுதி மீண்டும் காங். வசமாகுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

News May 3, 2024

கோடையில் வாட்டும் சிறுநீரக் கல் பிரச்னை

image

கோடைக் காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல் உபாதைகளுள் ஒன்று சிறுநீரகக் கல். உடல் கழிவுகளை வெளியேற்றி தூய்மைப்படுத்துவது சிறுநீரகம். எனவே, அதன் நலன் பேணுவது அவசியம். அதற்கு, செயற்கை பானங்களை தவிர்த்து, இளநீர், மோர் குடிக்கலாம். நார்ச்சத்து உணவுகளான சிறுதானியங்களை எடுக்கலாம். உப்பு அதிகமாக உள்ள உணவுகளைத் தவிர்க்கலாம். அதிக அளவில் நீர் அருந்துவது, திரவ உணவு எடுப்பதால் இப்பிரச்னை வராமல் தடுக்கலாம்.

News May 3, 2024

இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு அலர்ட்

image

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை மற்றும் வெப்பச்சலன மழைக்கான இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பச்சலனத்தால் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், இன்று வெப்ப அலை தொடரும் என்பதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தரைக்காற்று 40 கி.மீ. வரை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!