News May 3, 2024
கோடையில் வாட்டும் சிறுநீரக் கல் பிரச்னை

கோடைக் காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல் உபாதைகளுள் ஒன்று சிறுநீரகக் கல். உடல் கழிவுகளை வெளியேற்றி தூய்மைப்படுத்துவது சிறுநீரகம். எனவே, அதன் நலன் பேணுவது அவசியம். அதற்கு, செயற்கை பானங்களை தவிர்த்து, இளநீர், மோர் குடிக்கலாம். நார்ச்சத்து உணவுகளான சிறுதானியங்களை எடுக்கலாம். உப்பு அதிகமாக உள்ள உணவுகளைத் தவிர்க்கலாம். அதிக அளவில் நீர் அருந்துவது, திரவ உணவு எடுப்பதால் இப்பிரச்னை வராமல் தடுக்கலாம்.
Similar News
News November 12, 2025
AI கேர்ள் ஃபிரண்ட்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்!

AI கேர்ள் ஃபிரண்ட்கள், Anime-Style சாட்பாட்களுடன் எச்சரிக்கையாக இருக்குமாறு Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். மனிதர்களுடன் உறவுகளை மேம்படுத்த சில AI நிறுவனங்கள் சாட்பாட்களை உருவாக்குகின்றன. அதனுடன் உரையாடும் அனைத்தையும் அவை ஞாபகம் வைத்துக் கொள்ளும். அதனுடன் ஆழமான உறவை பேணுவது மனிதர்களின் சிந்தனையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News November 12, 2025
வரலாற்று சிறப்புமிக்க பிஹார் தேர்தல்: EC

பிஹார் தேர்தலானது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று EC ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக நடந்த SIR-ல் 7.5 கோடி வாக்காளர்கள், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய 1,76,000 பூத் ஏஜென்ட் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேர்தல் பணியாளர்களின் அயராத முயற்சியால், பிஹாரில் உள்ள 38 மாவட்ட நீதிமன்றங்களில் SIR-க்கு எதிராக ஒற்றை புகார் கூட முறையீடு செய்யப்படவில்லை என்று பேசியுள்ளார்.
News November 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


