News April 10, 2024

50 ரன்களை கடந்த ரியான் பராக்

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 50 ரன்களை கடந்தார். டாஸ் வென்ற GT முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய RR அணி தற்போது வரை 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரியான் பராக் 35 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 55 ரன்களை விளாசியுள்ளார். இந்தப் போட்டியை எந்த அணி வெல்லும்.?

News April 10, 2024

மோடியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி புகார்

image

பிரதமர் மோடியின் புகைப்படத்தை கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால், அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமோகாவில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், தன்னை பாஜக வேட்பாளர் போல காட்டிக்கொள்ள, பிரதமர் மோடியின் புகைப்படங்களை அவர் தவறாக பயன்படுத்தி வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.

News April 10, 2024

ட்ரெண்டான ரவி சாஸ்திரி

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ‘ஐ ஆம் ஹாட்டி’, ‘ஐ ஆம் நாட்டி’, ‘ஐ ஆம் சிக்ஸ்டி’ என்ற கேப்சனுடன் ஹாயாக போஸ் கொடுத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் அவரை கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

News April 10, 2024

கராச்சியில் குவிந்த 4 லட்சம் பிச்சைக்காரர்கள்!

image

கராச்சியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் குவிந்ததால், பாகிஸ்தான் போலீசார் திணறி வருகின்றனர். ரமலான் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தானில் பல்வேறு பகுதியில் இருந்து யாசகம் பெறுவதற்காக அங்கு பிச்சைக்காரர்கள் குவிந்துள்ளனர். இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் பலரும் கூட்டத்தில் ஊடுருவியதால் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போலீசார் கவலை அடைந்துள்ளனர்.

News April 10, 2024

எஸ்ஐபி திட்டங்களில் குவிந்த ரூ.19,270 கோடி

image

எஸ்ஐபி (SIP) முதலீட்டு திட்டங்களில் கடந்த மார்ச்சில் மட்டும் இந்தியர்கள் ரூ.19,270 கோடியை முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச்சில் 42 லட்சத்து 87 ஆயிரத்து 117 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எஸ்ஐபி திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சராசரி சொத்துக்களின் மதிப்பு ரூ.10,71,665.63 கோடியாக அதிகரித்துள்ளது.

News April 10, 2024

வீடு தேடி பணம் தரும் ஆதார் ஏடிஎம் சேவை அறிவோமா?

image

அவசரத் தேவைக்கு பணம் தேவை. அதே நேரம், வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் இருப்போருக்கு ஆன்லைன் ஆதார் ஏடிஎம் சேவையை இந்திய அஞ்சலக வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த சேவையை பெற ஆதாருடன் உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் போதும். அஞ்சலக ஊழியர் வீட்டுக்கே வந்து பணத்தை கொடுத்து விடுவார். மேலும் டெபாசிட், பேலன்ஸ் சேவையையும் பெறலாம். அதிகபட்சமாக ரூ.10,000 பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

News April 10, 2024

சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்

image

அதிமுக, பாமக, அமமுக ஆகிய எதிர்க்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் சரமாரியாக சாடியிருக்கிறார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் அவர், “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று பேசிய டிடிவி தினகரன்தான் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்” என்றார். சிஏஏ சட்டத்தை ஆதரித்து துரோகம் செய்த கட்சிகள்தான் அதிமுகவும் பாமகவும் என்று முதல்வர் ஆக்ரோஷமாக பேசினார்.

News April 10, 2024

8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும்

image

ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் 8 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து அணிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றன. தற்போதைய விதிகளின்படி 4 வீரர்கள் மற்றும் RTM அடிப்படையில் ஒருவர் என 5 பேரை தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த விதி அணியின் வீரர்களை சிதறிப் போகச் செய்வதாகவும் 8 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

News April 10, 2024

நவம்பரில் ED ரெய்டு, ஏப்ரலில் ராஜினாமா

image

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இன்று மாலை ராஜினாமா செய்தார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெய்டுக்கு பயந்து அவர் பாஜக பக்கம் சாய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

News April 10, 2024

இன்றே ரம்ஜான் கொண்டாட்டம். நாளை விடுமுறை உண்டா?

image

நேற்று பிறை தெரியவில்லை என்று தமிழக காஜி அறிவித்ததால் அரசு ஏப்ரல் 11ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்தது. ஆனால், இரவு 10 மணியளவில் பிறை தென்பட்டதால் தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் இன்றே ரம்ஜான் பெருநாளை கொண்டாடிவிட்டனர். இதனால் நாளை விடுமுறை உண்டா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் எந்த குழப்பமும் இல்லை என்றும், காஜி சொன்னதுபோல நாளை (ஏப்ரல் 11) விடுமுறை தினம் என்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

error: Content is protected !!