News May 14, 2024

மனைவியிடம் வாடகை கேட்கும் கோடீஸ்வர கணவர்

image

தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், கோல்ப், போட்டிங் என தன் கணவர் சொகுசாக வாழ்வதாகவும், தன்னை விட்டுவிட்டு சுற்றுலா செல்வதாகவும், ஆனால் தாம் பல மணி நேரம் வீட்டு வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், அவரின் கணவரை விமர்சிக்கின்றனர்.

News May 14, 2024

வேட்பாளர் கிடைக்காமல் தவிக்கும் காங்கிரஸ்

image

தேர்தலில் போட்டியிட வேட்பாளர் இல்லாமல் காங்கிரஸ் தவிப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தெரிவித்து வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மோகன் யாதவ், வேட்பாளர்களை தேடி அலையும் நிலையில் காங்கிரஸ் உள்ளது, அப்படியிருக்கையில் எப்படி ஆட்சியமைக்கும்? என்றார்.

News May 14, 2024

3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்து

image

முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 – 19 வரை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 17இல் 555, மே 18இல் 645 மற்றும் மே 19ஆம் தேதி 280 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.

News May 14, 2024

ஒலிம்பிக் மல்யுத்தம்: 2021இல் 1, 2024இல் 5 வீராங்கனைகள்

image

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு 5 மல்யுத்த வீராங்கனைகளை இந்தியா அனுப்பவுள்ளது. 2012இல் ஒரேயொரு மல்யுத்த வீராங்கனையை இந்தியா அனுப்பிய நிலையில், பதக்கம் கிடைக்கவில்லை. 2016இல் 3 வீராங்கனைகள் சென்ற நிலையில், வெண்கல பதக்கம் கிடைத்தது. 2020இல் 4 வீராங்கனைகள் சென்றும் பதக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2024 ஒலிம்பிக்கிற்கு அதிக எண்ணிக்கையில் 5 வீராங்கனைகள் இந்தியா அனுப்புகிறது.

News May 14, 2024

எம்.ஏ படித்துள்ள பிரதமர் மோடி

image

பிரதமர் மோடி தனது கல்வித்தகுதி குறித்து பிரமாணப் பாத்திரத்தில் தெரிவித்த தகவல்கள் பேசுபொருளாகியுள்ளது. வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி தனது பள்ளிக் கல்வியை (SSC) 1967இல் குஜராத் மாநிலத்திலும், பி.ஏ., பட்டப்படிப்பை 1978இல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பயின்றதாகவும், எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பை 1983இல் குஜராத் பல்கலைக் கழகத்தில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News May 14, 2024

அதிரடியாக அரை சதம் அடித்த பொரேல்

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் டெல்லி அணி வீரர் அபிஷேக் பொரேல்21 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவரும் இவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். நிதானமாக ஆடிவரும் மற்றொரு வீரர் சாய் ஹோப் 32* ரன்கள் அடித்துள்ளார். தற்போது டெல்லி அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 14, 2024

75 வயதானதும் ஓய்வு பெறும் சட்டம் பாஜகவில் இல்லை

image

75 வயதானதை சுட்டிக்காட்டி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பாஜகவில் இருந்து 2014இல் ஓரங்கட்டப்பட்டனர். இதை சுட்டிக்காட்டி 75 வயதானதும் மோடி ஓய்வு பெறுவார், பிறகு அமித் ஷா பிரதமராவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, அப்படியொரு விதி கட்சியில் இல்லை, இந்தத் தேர்தலிலேயே 75 வயதுக்கும் அதிகமான 10 பேர் போட்டியிடுகின்றனர் என்றார்.

News May 14, 2024

DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது

image

வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி செய்ததாக தீரஜ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக யெஸ் வங்கி ஊழல் வழக்கில் கைதான அவர் ஜாமினில் வெளிவந்தார்.

News May 14, 2024

சத்யராஜின் வெப்பன் திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ்

image

நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் பிள்ளை, நடிகை தான்யா ஹோப் உள்ளிட்டோர் வெப்பன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைகளத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியான நிலையில், படம் இந்த மாத இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

News May 14, 2024

70 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்

image

நாடு முழுவதும் 70 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பெரிய வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அது எதையுமே பாஜக நிறைவேற்றாது என்றும், அதுபோல்தான் கருப்பு பணம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மோடி அளித்தார் என்றும் தெரிவித்தார். 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!