News May 14, 2024
DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது

வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி செய்ததாக தீரஜ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக யெஸ் வங்கி ஊழல் வழக்கில் கைதான அவர் ஜாமினில் வெளிவந்தார்.
Similar News
News December 11, 2025
இந்தியாவில் ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யும் அமேசான்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதற்காக ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. லாஜிஸ்டிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த ஏற்றுமதி 80 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்யும் 1.5 கோடி பேருக்கு AI-ன் பலன்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.
News December 10, 2025
ராசி பலன்கள் (11.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


