India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் தமிழ்நாட்டில் பிரச்னையாக்க முயற்சிப்பதாகவும், அடிப்படையில்லாத தகவல்களை வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டினார். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்க பிரச்னைகள் குறித்து அவர்கள் பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
ராமநாதபுரத்தில் உள்ளடி வேலைகள் உச்சகட்டத்தில் நடந்து வருவதாக முஸ்லீம் லீக் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. நவாஸ்கனியுடனான முன்பகை உள்ளிட்ட காரணங்களால் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில்கூட முழுமையாகப் பிரசாரம் நடக்கவில்லையாம். அந்தளவுக்கு இத்தொகுதியில் ஈகோ யுத்தம் நடக்கிறதாம்.
நடிகர் பரத் நடித்துள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஃப்ரைடே பிலிம் பேக்டரி & பி.ஜி.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டப்பிங் & போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் மும்முரமாக நடந்து வருகின்றன.
முன்னாள் தலைமைச்செயலாளர் பி.எஸ்.ராகவன் (97) சென்னையில் காலமானார். 1961இல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவில் செயலாளராக பொறுப்பேற்று, நாட்டின் பிரதமர்களான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, இவர் உணவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்தபோது தான் தமிழகத்துக்கு கூடுதல் அரசியை ஒதுக்கினார். இது, எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர பெரும் உதவியாக இருந்தது.
தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலானது, திமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் களமாக மாறியுள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதமும், மோதலும் நடைபெறும். ஆனால் இம்முறை திமுக அரசுக்கு எதிராக அதிமுக முன்வைக்க வேண்டிய குற்றச்சாட்டு, விமர்சனங்களை பாஜக முன்வைக்கிறது. இதற்கு திமுகவும் பதிலளித்து வருவதால், 2024 தேர்தல் களமானது, திமுக மற்றும் பாஜக மோதல் களமாக மாறியுள்ளது.
2027இல் தென்ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இதன்படி கிங்ஸ்மீட், ஜார்ஜ்ஸ் பார்க், பப்பலோ பார்க், போலண்ட் பார்க், வான்டரர்ஸ், செஞ்சூரியன் பார்க் உள்ளிட்ட 8 மைதானங்களில் போட்டி நடைபெறவுள்ளது. விமான நிலையம், ரசிகர்கள் தங்குவதற்கு ஓட்டல் உள்ளிட்ட வசதிகளை பரிசீலித்து இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாக திராவிடக் கட்சிகளை சேர்ந்த பலர், பாஜகவை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில், வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து புதுக்கோட்டை செல்வம் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன் விளையாடிய அவர், 45ஆவது நகர்த்தலில் நிஜாத்தை வீழ்த்தினார். இதனால் 3.5 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், கடலோரப் பகுதிகளில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் கொளுத்தும். சென்னையில் 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதிய நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்க்கவும்.
காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்த பணிகளை 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை 80 முறை காங்கிரஸ் உடைத்து உள்ளதாகவும், இதுபெரிய பாவம் என்றும் விமர்சித்தார். சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் உயர்வானவர் இல்லை, தகுதியே ஒருவரை உயர்வானராக்குகிறது என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.