India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கும் இடங்களில் எல்லாம் என் கால்கள் பயணிக்கும்” என்று முழங்கியவர் சே குவேரா. அந்த புரட்சிகர சிந்தனைதான் அவரை கியூபா, காங்கோ, தான்சானியா, பொலிவியா போன்ற நாடுகளின் விடுதலைக்கு போராட வைத்தது. உலகின் வல்லாதிக்கத்தை தனி ஆளாக எதிர்த்து தத்துவார்த்த அடையாளமாகிப் போன அவர் மறைந்து 57 ஆண்டுகளான போதிலும், இன்னமும் பல இளைஞர்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார்.
1) பின்லாந்தில் எத்தனை ஏரிகள் உள்ளன? 2) பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் எது? 3) ISO என்பதன் விரிவாக்கம் என்ன? 4) காஞ்சன் ஜங்கா பனிச் சிகரத்தில் வளரும் செடியின் பெயர் என்ன? 5) கிரிக்கெட்டைப் போன்று வேறெந்த விளையாட்டில் செஞ்சுரி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது? 6) எளிதில் ஆவியாகாதத் திரவம் எது? 7) நாயின் கண்களுக்குத் தெரியாத நிறம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
இஸ்ரேல் – ஈரான் போர் ஒருபுறம் தீவிரம் அடைந்து கொண்டிருக்க, மறுபுறம், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், “லெபனான் மக்களே, ஹிஸ்புல்லாவை அகற்றி போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இல்லையெனில், காசா பேரழிவு உங்களுக்கும் வரும். உங்கள் முடிவை நீங்களே தீர்மானியுங்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்தியச் சந்தையில் மேம்படுத்தப்பட்ட 200 DUKE பைக்கை KTM நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6 கியர் பாக்ஸ், 25 Bhp பவர், 19.3 NM டார்க் இழுவிசை, 199.5 cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளன. 5 இன்ச் DFT டிஸ்பிளே மூலம் KTM கனெக்ட் ஆப்ஸ் இணைத்து நேவிகேஷன் வசதியை பயன்படுத்தலாம். லிட்டருக்கு 35 Km மைலேஜ் தரும். 159 Kg எடையில், 3 புது வண்ணங்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹2.03 லட்சமாகும்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60, வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
சென்னையில் சமீபகாலமாக ரயில்களிலும், பஸ்களிலும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அராஜகம் அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட, ரூட்டு தல விவகாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இந்நிலையில், ரயில்களில் இனி ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
➤ஏசியன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தென் கொரியாவை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ➤U-19 ஜூனியர் ஆஸி. அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 492 ரன்னில் ஆல்-அவுட்டானது. ➤குளோபல் செஸ் லீக்: ஆல்பைன் அணியின் வீரர் பிரக்ஞானந்தா, மும்பை மாஸ்டர்ஸ் அணியின் வீரர் விதித் குஜ்ராத்தியை 31ஆவது நகர்த்தலில் வெற்றி கொண்டார்.
➤தென் கொரியா, USAவுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ➤லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழந்தார். ➤உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. ➤ஹைதி பிரதமர் கேரி கோனிலுக்கு எதிரான செரிசியர் ஆயுதக்குழுவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
பிளாக் காஃபி சேர்த்து 3 முக்கிய உணவுப்பொருள்களை சாப்பிடவே கூடாது என டயட்டீஷியன்ஸ் கூறுகின்றனர். பிளாக் காஃபியில் உள்ள கஃபைன் எனும் வேதிப்பொருளுடன் இரும்புச்சத்து கொண்ட நட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா), பச்சை இலை காய்கறிகள் (கீரை வகைகள்), மஞ்சள் (குர்குமின்) சாப்பிட்டால் உடலில் வயிற்றுக் கோளாறு, அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, இவற்றுடன் பிளாக் காஃபியை சேர்த்து பருகுவதைத் தவிர்க்கவும்.
Sorry, no posts matched your criteria.