News October 9, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤தென் கொரியா, USAவுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ➤லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழந்தார். ➤உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. ➤ஹைதி பிரதமர் கேரி கோனிலுக்கு எதிரான செரிசியர் ஆயுதக்குழுவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

Similar News

News November 9, 2025

டாப்-7 சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்!

image

இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் டாப்-7 சிறந்த படங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். இவற்றில் சில படங்களை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். படங்களின் விவரத்தை SWIPE செய்து தெரிந்து கொள்வதுடன், பார்க்காதவற்றை தவறாமல் OTT-ல் பார்க்கவும்.

News November 9, 2025

நவம்பர் 9: வரலாற்றில் இன்று

image

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.

News November 9, 2025

பூதத்தின் பிடியில் தமிழ் சினிமா: கஸ்தூரி

image

தமிழ் திரையுலகம் ஒரு பூதத்தின் பிடியில் இருப்பதாக கஸ்தூரி விமர்சித்துள்ளார். பாஜக மாநில கலை & கலாசார பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ் திரையுலகம் ஒரு சாராரிடம் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அது மொத்த ஊரிடம் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி நன்றாக பரிணமிக்கும் என்றும், திரைத்துறையை விடுவிப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கஸ்தூரி பேசியுள்ளார்.

error: Content is protected !!